AutoFS/ta
AutoFS என்பது லினக்ஸ் கருநிரல் தானியங்கி-ஏற்றத்தைப் பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப கோப்பு முறைமைகளைத் தானியக்கமாக ஏற்ற வல்ல ஒரு நிரலாகும். இது USB ஃபிளாஷ் நினைவகம் மற்றும் வெளிப்புற வன்தட்டு நினைவகம், வலைப்பின்னல் பகிர்வகம், CD-ROM/DVD/Blu-ray மற்றும் பல ஆகியவற்றோடு வேளை செய்கிறது.
AutoFS உள்ளூர் கோப்பு முறைமைகளிலுள்ள அடைவுகளைக் கண்காணிப்பதன் மூலம் வேளை செய்கிறது. ஒரு நிரல் ஏதேனும் ஒரு அடைவை அணுக முயற்சிக்கும் போது, AutoFS ஏதாவது ஒன்றை அந்த அடைவில் ஏற்றும். எந்த அடைவைக் கண்காணிக்க வேண்டும் மற்றும் எதை அதில் ஏற்ற வேண்டும் என்பதை /etc/autofs/autofs.master போன்ற AutoFS உள்ளமைவுக் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. AutoFS ஏற்றங்களை எவ்வாறு உள்ளமைக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டுக்களை இங்கே காணலாம் #பயன்பாடு.
நிறுவல்
AutoFS-ற்கு ஒரு கருநிரல் தொகுதியும், பயனரிட நிரலும் தேவை.
ஒரு கோப்பு முறையை AutoFS மூலமாகவோ அல்லது கைமுறையாகவோ ஏற்றுவதற்கு, அதற்குரிய ஏற்று-உதவியாளர் மென்பொருள் ஏற்றப்படுவதற்கு முன்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, NTFS கோப்பு முறையை ஏற்றுவதற்கு sys-fs/ntfs3g அல்லது இதற்கு இணையான மென்பொருள் தேவை. சில கோப்பு முறைமைகளுக்கு கருநிரல் உள்ளமைவில் மாற்றங்கள் தேவைப்படலாம். ஒரு குறிப்பிட்ட கோப்பு முறைமையை ஏற்றுவதற்கு எவ்வகை மென்பொருள் அல்லது உள்ளமைவு தேவை என்பதை அறிய விக்கி பக்கங்களை அனுகவும்.
கருநிரல் உள்ளமைவு
பின்வரும் கருநிரல் விருப்பத்தேர்வு தானியங்கி-ஏற்றத்திற்கு தேவையான கருநிரல் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
File systems --->
<*/M> Kernel automounter version 4 support (also supports v3)
விருப்பத்தேர்வு M என அமைக்கப்பட்டிருந்தால், AutoFS இயங்குவதற்கு முன் தொகுதி-கோப்பு உள்ள பகிர்வு ஏற்றப்பட்டிருக்க வேண்டும்.
பயனரிட நிரல்
பெரும்பாலான லினக்ஸ் கோப்பு முறைமைகளைப் போலவே, கருநிரலில் தொடர்புடைய விருப்பத்தேர்வுகளை இயக்குவதோடு, ஏற்றத்தை கையாளுவதற்கு பயனரிட தொகுப்பு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
USE flags for net-fs/autofs Kernel based automounter
+libtirpc
|
Use TiRPC library instead of SunRPC |
ldap
|
Install LDAP module |
mount-locking
|
Enable locking to prevent corruption of /etc/mtab in the presence of concurrent auto-mounting. If enabled, recursive auto-mounting (eg. using autofs to bind or loop mount a filesystem which is itself auto-mounted) is not possible. |
sasl
|
Enable SASL support in the LDAP module |
selinux
|
!!internal use only!! Security Enhanced Linux support, this must be set by the selinux profile or breakage will occur |
systemd
|
Enable use of systemd-specific libraries and features like socket activation or session tracking |
பின்வரும் கட்டளையைக் கொண்டு இதை நிறுவலாம்:
root #
emerge --ask net-fs/autofs
Additional software
To be able to mount NFS file systems, the net-fs/nfs-utils package is required:
root #
emerge --ask net-fs/nfs-utils
For CIFS file systems the net-fs/cifs-utils package is additionally required:
root #
emerge --ask net-fs/cifs-utils
For WebDAV file systems the net-fs/davfs2 package is required:
root #
emerge --ask net-fs/davfs2
உள்ளமைவு
சேவை
தானியக்க-ஏற்றம் வேளை செய்வதற்கு AutoFS மறைநிரல் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
OpenRC
AutoFS ஐ முன்னிருப்பு ஓடுநிலையில் சேர்க்க:
root #
rc-update add autofs default
மறுதொடக்கத்திற்கு முன் தானியங்கி-ஏற்றுநரை பயன்படுத்துவதற்கு, கைமுறையாகத் துவக்கவும்:
root #
/etc/init.d/autofs start
உள்ளமைவுக் கோப்புகளை முதலில் திருத்த அறிவுறுத்தப்படுகிறது. உள்ளமைவை திருத்திய பின்னர், ஏற்கனவே AutoFS இயங்கிக்கொண்டிருந்தால்,
root #
/etc/init.d/autofs reload
கோப்புகள்
AutoFS இன் முன்னிருப்பு நிறுவல் பின்வரும் 4 உள்ளமைவுக் கோப்புகளை அளிக்கின்றது:
கோப்பு | விளக்கம் |
---|---|
/etc/conf.d/autofs | இந்த கோப்பு கட்டளை-வரி விருப்பத்தேர்வுகளை automount நிரலில் இடுவதற்கு பயன்படுகிறது. பெரும்பாலான பயனர்கள் இதை திருத்த வேண்டிய தேவையில்லை.
|
/etc/autofs/autofs.conf | இந்த கோப்பு AutoFS ற்கான சில முன்னிருப்பு அளவுருக்களான முதன்மை வரைபட கோப்பின் இருப்பிடம், செயலற்ற ஏற்றங்களை துண்டிக்கும் முன்னிருப்பு நேர-முடிவுகள் ஆகியவற்றை வரையறுக்கிறது. பெரும்பாலான பயனர்கள் இதை திருத்த வேண்டிய தேவையில்லை. |
/etc/autofs/auto.master | இதுதான் "முதன்மை வரைபடம்", "வரைபட கோப்பு" மற்றும் AutoFS இடம் எதை எங்கு ஏற்ற வேண்டும் என்பதை கூறும் பல வளங்களுக்கான குறியீடு. பெரும்பாலான பயனர்கள் இதை திருத்த வேண்டிய தேவை உள்ளது. |
/etc/autofs/auto.misc | இது முதன்மை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "வரைபட கோப்பின்" எடுத்துக்காட்டாகும். இது எதை எங்கு ஏற்ற வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. பெரும்பாலான பயனர்கள் இதை திருத்த வேண்டிய தேவை உள்ளது. |
/etc/conf.d/autofs
/etc/conf.d/autofs என்னும் இந்த உள்ளமைவுக் கோப்பு init ஆணைத்தொடரோடு /etc/init.d/autofs தொடர்புடையது. அடிப்படை AutoFS பயன்பாட்டிற்கு, இந்த கோப்பில் எதையும் மாற்ற தேவையில்லை.
இக்கோப்பு இரண்டு மாறிகளை வரையறுக்கிறது:
- USE_MISC_DEVICE: இது
"yes"
என அமைக்கப்பட்டிருந்தால், init ஆணைத்தொடர் /dev/autofs என்னும் சாதனக்கோப்பை உருவாக்கும். - OPTIONS: இது
automount
ற்கு அனுப்ப வேண்டிய கட்டளை-வரி தருமதிப்புக்களை கொண்டுள்ளது. எல்லா அனுமதிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகளையும் அறிந்துகொள்ளman 8 automount
என்னும் கட்டளையை இட்டு இதன் கைமுறை பக்கத்தைப் பார்க்கவும்.
automount
ற்கு கட்டாய தருமதிப்பான "முதன்மை வரைபடத்தின் கோப்புப்பெயர்" ஐ இடலாம், ஆனால் பெரும்பாலான பயனர்களுக்கு முன்னிருப்பு மதிப்பான auto.master
போதுமானது. இதை மாற்ற விரும்பினால், /etc/autofs/autofs.conf கோப்பில் உள்ள உள்ளமைவு மாறியான master_map_name ஐ அமைப்பது சிறந்த வழியாகும். மிதமுள்ள பக்கம் முதன்மை வரைபடத்தின் கோப்புப்பெயர் முன்னிருப்பு மதிப்பிலே உள்ளது என்னும் அனுமானத்தில் செல்கிறது./etc/autofs/autofs.conf
/etc/autofs/autofs.conf AutoFS இன் சொந்த உள்ளமைவுக் கோப்பாகும். முன்னிருப்பு நிறுவல் நன்கு கருத்துரைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த கோப்பில் குறிக்கக்கூடிய விருப்பத்தேர்வுகள் எல்லாம் கைமுறைப்பக்கத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதை காண கீழுள்ள கட்டளையை இடவும்
user $
man 5 autofs.conf
அடிப்படை AutoFS பயன்பாட்டிற்கு, இந்த கோப்பில் எதையும் மாற்றத் தேவையில்லை.
/etc/autofs/auto.master
/etc/autofs/auto.master என்பது (முன்னிருப்பு) "முதன்மை வரைபடம்". இதிலுள்ள ஒவ்வொரு வரியும் ஒரு AutoFS ஏற்றத்தை விவரிக்கிறது.
Basic usage is described in man auto.master
AutoFS
/bin/mount
அல்லது /etc/fstab போன்று "mount" மற்றும் "mount point" ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதில்லை.பொதுவாக, கோப்பில் உள்ள வரிகள் இவ்வாறான வடிவமைப்பில் இருக்கும்:
mount-point [map-type[,format]:]map [options]
Indirect maps will be created, similarly to mkdir -p and is removed when the filesystem is unmounts.
சுருக்கமாக சொன்னால், mount-point
எந்த அடைவை AutoFS கண்காணிக்க வேண்டும் என்பதையும் map
அந்த அடைவில் எதை ஏற்ற வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும் விவரங்களுக்கு, கீழுள்ள #பயன்பாடு வை காண்க அல்லது இதற்கான கைமுறை பக்கத்தை காண man 5 auto.master
என்னும் கட்டளையை இடுக.
முதல் இரண்டு உள்ளடக்கங்களான (வெற்றிடத்தால் பிரிக்கப்பட்டுள்ளது) mount-point
மற்றும் map
ஆகியவற்றை கையாண்ட பிறகு, இவ்விரண்டிற்கு அடுத்து வரும் எதுவாயினும் விருப்பத்தேர்வாகக் கருதப்படும். விருப்பத்தேர்வு கோடில் துவங்கினால் அது AutoFS இன் automount நிரலுக்குரியதாகக் கருதப்படும். mount ற்கு அனுப்பப்படும் விருப்பத்தேர்வுகள் -o
என்னும் சொடுக்கியை தொடர்ந்து வரும். எடுத்துக்காட்டிற்கு #பயன்பாடு வை காண்க.
auto.master
இல் உள்ளக் கருத்தில் key [ -mount-options-seperated-by-comma ] location
என்னும் வடிவமைப்பு கூறப்பட்டுள்ளது. பதிப்பு 5.1.2 இன் படி இது தவறான வடிவமைப்பாகும். இந்த வடிவமைப்பு வரைபட கோப்புகளில் உள்ள பதிவுகளான /etc/autofs/auto.misc ஆகியவற்றிற்குப் பொருந்தும்/etc/autofs/auto.misc
/etc/autofs/auto.misc இது "வரைபட கோப்பு" வின் எடுத்துக்காட்டாகும். முதன்மை வரைபட கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரைபட கோப்புகள் மட்டுமே AutoFS ஆல் பயன்படுத்தப்படும், ஆகையால் பொருத்தமாக இந்த /etc/autofs/auto.master கோப்பை திருத்திய பின்னர் இதை மறுபெயரிடவோ அழிக்கவோ செய்யலாம். நீங்கள் இதே தொடரியலை பயன்படுத்தி கூடுதல் வரைபட கோப்புகளை உருவாக்கலாம். வழக்கமாக வரைபட கோப்பு இவ்வாறு பெயரிடப்படும் /etc/autofs/auto.*.
கோப்பில் உள்ள வரிகள் இவ்வாறான வடிவமைப்பில் இருக்கும்:
key [-options] location
இதில் key
என்பது AutoFS-ஓடு தொடர்புடைய ஒரு தனித்துவமான திறவுகோலைக் குறிப்பிடுகிறது. இது கோப்பு முறைமை ஏற்றப்படும் பகுதி அல்லது முழு பாதையையும் உருவாக்குகிறது. location
எந்த கோப்பு முறைமையை அங்கு ஏற்ற வேண்டும் என்பதை AutoFS ற்கு எடுத்துரைக்கிறது. -options
என்பது சில சிறப்பு விருப்பத்தேர்வுகளான fstype
ஆகியவை தவிர்த்து மற்ற mount ற்கு அனுப்பவேண்டிய காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட விருப்பத்தேர்வு பட்டியல். மேலும் விவரங்களுக்கு, கீழுள்ள #பயன்பாடு வை காண்க அல்லது இதற்கான கைமுறை பக்கத்தைப் பின்வரும் கட்டளையை இட்டுப் பார்க்கவும்
user $
man 5 autofs
பயன்பாடு
Autofs mounts will not be mounted until access is attempted. This means it cannot be used to simply automatically mount devices added to the system.
AutoFS mounts are specified in /etc/autofs/auto.master
Example configuration:
mount-point [map-type[,format]:]map [-options]
key [-map-options] location
இதில் location
என்னும் உள்ளடக்கம் புரவலன்:பாதை
என்னும் வடிவமைப்பில் கட்டளைகளை எடுத்துக்கொள்கிறது. உள்ளூர் இயந்திரத்தின் பாதையை குறிக்க புரவலன்
கூறை வெறுமையாக விடலாம். மற்றபடி பெயரிட்ட தொலைநிலை புரவலன் மற்றும் பாதை ஆகியவை NFS உதவியோடு ஏற்றப்படும்.
With this configuration, /media/blockdev will be crated when the autofs service is started. If a device exists at /dev/sda1 and access to /media/blockdev/sda1 is attempted, the device at that location should automatically mount there.
இரண்டு வகையான AutoFS ஏற்றங்கள் உள்ளன, நேரடி மற்றும் மறைமுக.
நேரடி AutoFS ஏற்றம்
நேரடி AutoFS ஏற்றத்தில், mount-point
என்பது /-
மற்றும் வரைபட கோப்பில் உள்ள key
என்பது கோப்பு முறைமை ஏற்றப்படும் இடத்தின் முழு பாதை. எடுத்துக்காட்டாக, AutoFS இன் கைமுறை பக்கங்களில் இவ்வாறான உதாரணங்கள் இடம்பெற்றுள்ளன:
/- /etc/autofs/auto.data
/tst/sbin bogus:/usr/sbin
இவ்வரிகள் AutoFS ஐ /tst/sbin என்னும் அடைவைக் கண்காணிக்கச் சொல்கின்றன. இதன்மூலம் ஏதாவது ஒரு நிரல் இந்த அடைவை அணுக முற்பட்டால், AutoFS உடனடியாக bogus
என்னும் தொலைநிலை புரவலனில் உள்ள /usr/sbin
என்னும் அடைவை /tst/sbin
என்னும் உள்ளூர் அடைவில் ஏற்றும். தெளிவாகச் சொன்னால், இது திறம்படக் கட்டளையைச் செய்து முடிக்கும்
root #
mount -t nfs bogus:/usr/sbin /tst/sbin
உள்ளூர் சாதனம் ஏற்றப்படுவதன் எடுத்துக்காட்டு இவ்வாறாக இருக்கும்:
/- /etc/autofs/auto.local
/mnt/stuff -fstype=ext4 :/dev/sdd1
இது திறம்படக் கட்டளையைச் செய்து முடிக்கும்
root #
mount -t ext4 /dev/sdd1 /mnt/stuff
மறைமுக AutoFS ஏற்றம்
மறைமுக AutoFS ஏற்றத்தில், mount-point
என்பது ஒரு அடைவு பாதை மற்றும் map
என்பது இந்த அடைவில் சாதனங்களை ஏற்றுவதற்கான விதிகளை உள்ளடக்கிய கோப்பின் முழு பாதையாகும். எடுத்துக்காட்டாக, முன்னிருப்பு நிறுவல் பின்வரும் வரியைக் கொண்டிருக்கும் (இருப்பினும் கருத்தாக தெரிவிக்கப்பட்டு இருக்கும்):
/misc /etc/autofs/auto.misc
இவ்வரி AutoFS ஐ /misc ற்கு கீழ் உள்ள கோப்புகள் அல்லது அடைவுகள் கோப்பு முறைமையின் அனுமதியை கோருகின்றனவா என்பதை கண்காணிக்கச் சொல்கிறது. ஒரு நிரல் /misc ற்கு கீழ் உள்ள ஏதேனும் ஒன்றை அணுக முயற்சித்தால், AutoFS /etc/autofs/auto.misc இல் உள்ள உள்ளமைவை பயன்படுத்தி தானியக்கமாக ஒன்றை ஏற்ற வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். ஒவ்வொரு (கருத்து-அல்லாத, வெற்றிடம்-அல்லாத) வரியும் AutoFS /misc இன் கீழ் எதை ஏற்ற வேண்டும் என்பதை கூறுகிறது. எடுத்துக்காட்டாக,
cd -fstype=iso9660,ro,nosuid,nodev :/dev/cdrom
இவ்வரி AutoFS ஐ /misc/cd என்னுமிடத்தை கண்காணிக்க கட்டளையிடுகிறது. இதன்மூலம் நிரல் இந்த அடைவை அணுக முயன்றால் AutoFS கீழுள்ள கட்டளையை திறம்பட இயக்கும்
root #
mount -t iso9660 -o ro,nosuid,nodev /dev/cdrom /misc/cd
சில பல எடுத்துக்காட்டுக்களை இங்கு காணலாம்:
{{FileBox|filename=/etc/autofs/auto.misc|1=
- mount-point below /mnt/auto | mount options | device, network share etc.
மறைமுக ஏற்றத்தில் AutoFS ஆல் பல்லுருக்களை பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, பயனருடைய home அடைவு வேறொரு சாதனத்தில் இருந்து NFS மூலம் ஏற்றப்படுமானால், AutoFS இவ்வாறு உள்ளமைக்கப்பட்டிருக்கும்:
/home /etc/autofs/auto.home
* neighborhood:/export/home/&
இதன்மூலம் foo
என்னும் பயனர் உள்நுழைந்து அவர் home அடைவில் உள்ள கோப்புகளை அணுக முயற்சிக்கும் போது, AutoFS பின்வரும் கட்டளையைச் செயல்படுத்தும்
root #
mount -t nfs neighborhood:/export/home/foo /home/foo
பயனுள்ள விருப்பத்தேர்வுகள்
இந்த விருப்பத்தேர்வுகளை முதன்மை வரைபட கோப்பில் இடலாம்.
--timeout=<seconds>
இது எவ்வளவு நேரம் தானாக ஏற்றப்பட்ட கோப்பு முறைமை AutoFS ஆல் இறக்கப்படுவதற்கு முன் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது.--ghost
orbrowse
(கடைசியாகக் கூறியதிற்குக் கோடு கிடையாது) இது மறைமுக ஏற்றத்தின் போது பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் அடைவை அணுகும்போது மட்டுமல்லாமல் automount இன் மறைநிரல் துவங்கியவுடன் AutoFS ஏற்றுவதற்குரிய அந்த அடைவை உருவாக்கி விடும்.
விருப்பத்தேர்வுகளின் முழு விளக்கங்களை காண, இந்த கட்டளையை இடவும்
user $
man 5 auto.master
கோப்பு-அல்லாத வரைபடங்கள்
/etc/autofs/auto.master இல் map
மட்டுமில்லாது பல சிக்கலான உருவங்களான கோப்பு அல்லாத மற்ற வரைபடங்களை அணுமதிக்கும் map-type:map
போன்றவற்றையும் இரண்டாம் நெடுவரிசையில் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, அது வரைபட தனிக்குறிப்பீட்டை (வரைபட கோப்பில் உள்ள வரிகளை) வரையும் செயல்படுத்தகு கோப்பாக இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதொரு தரவுத்தள வகையாக இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வகைகளை பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழுள்ள கட்டளையை இடவும்
user $
man 5 auto.master
எளிமையான Windows ஐ போன்ற Samba பகிர் ஏற்றம்
இவ்வழியின் மூலம் Windows செய்வதை போன்று தானாக Samba வலைப்பின்னல் பகிர்வுகளை ஏற்ற முடியும். இந்த உள்ளமைவு கீழுள்ள கட்டளைகளை முனையத்தில் செயல்படுத்துவதன் மூலம் பகிர்வை தானாக-ஏற்றுதலை அனுமதிக்கிறது:
user $
cd /net/10.50.40.32/share
அல்லது உங்கள் கோப்பு முறைமையின் உலாவி / உரையாடலில் /net/10.50.40.32/share என்னும் இடத்திற்கு செல்லவும். இதில் கோப்புகள் உள்ளூர் சாதனத்தில் இருப்பதை போன்று தோன்றும்.
இது வேளை செய்வதற்கு, ஏற்றுவதற்கு முன் Samba நிறுவப்பட்டு உள்ளமைக்கப்பட்டிருக்க வேண்டும்
/net file:/etc/autofs/auto.smbm --ghost --nonstrict
* -fstype=autofs,-Dhost=& file://etc/autofs/auto.share
* -fstype=cifs,username=guest,password=,file_mode=0664,dir_mode=0775,uid=netmount,gid=netmount,port=139 ://${host}/&
Troubleshooting
In case of mount failure or problems use following steps to narrow the source of the issue.
Stop the autofs service:
root #
/etc/init.d/autofs stop
Run the automount
daemon in the foreground to log to stderr, add the verbose option to view logging of general status and progress messages in the current running terminal:
root #
automount -f -v
As a regular system user mount the filesystem by changing into the directory:
user $
cd /net/gentoo
Verify the output running the daemon in foreground and with verbose mode. Example failure message displayed in the output below:
root #
automount -f -v
Starting automounter version 5.1.6, master map auto.master using kernel protocol version 5.05 mounted indirect on /net with timeout 300, freq 75 seconds attempting to mount entry /net/gentoo >> mount: /net/gentoo: bad option; for several filesystems (e.g. nfs, cifs) you might need a /sbin/mount.<type> helper program. mount(generic): failed to mount //example.net/larry (type cifs) on /net/gentoo failed to mount /net/gentoo
வெளிப்புற வளங்கள்
- The Linux Documentation Project இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள Automount mini-Howto என்னும் கட்டுரை
- Ubuntu Community Help Wiki யில் இடம்பெற்றுள்ள AutoFS page என்னும் கட்டுரை