Gentoo Alpha Handbook

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:Alpha and the translation is 100% complete.


Alpha கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை

இந்த சென்டூ கையேடு ஆவணப்படுத்தலை ஒருங்கிணைக்க வேண்டும் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இந்த கையேட்டில் சென்டூவை இணையத்தின் உதவியோடு எவ்வாறு நிறுவுவது என்பதை பற்றியும், சென்டூவின் முற்கால மென்பொருட்களான OpenRC init முறைமை மற்றும் Portage தொகுப்பு மேலாளர் பற்றிய கூடுதல் பிரிவுகளும் உள்ளன.

சென்டூவை நிறுவுதல்

சென்டூ லினக்சு நிறுவல் பற்றி
இந்த பகுதி கையேட்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிறுவல் அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.
சரியான நிறுவல் ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
சென்டூவை பல வகையில் நிறுவலாம். இந்த பகுதி சென்டூவை சிறும நிறுவல் குறுந்தகட்டைப் பயன்படுத்தி நிறுவுவது என்பதை விவரிக்கிறது.
வலையமைப்பை உள்ளமைத்தல்
சமீபத்திய மூல நிரல் குறியீட்டைப் பதிவிறக்குவதற்காக வலையமைப்பை உள்ளமைக்க வேண்டும்.
தகடுகளை ஆயத்தப்படுத்துதல்
சென்டூவை நிறுவுவதற்கு முன் தேவையான பகிர்வுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பகுதி தகடுகளை எவ்வாறு பகிர்வு செய்வது என்பதை விளக்குகிறது.
சென்டூ நிறுவல் கோப்புகளை நிறுவுதல்
அடிப்படை சென்டூ முறைமை ஒரு நிலை3 காப்பக கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். இந்த பகுதி எப்படி இந்த கோப்பை பதிவிறக்கிப் பிரித்தெடுப்பது மற்றும் எவ்வாறு சென்டூவின் தொகுப்பு மேலாண்மை நிரலான Portage ஐ உள்ளமைப்பது போன்றவற்றை எடுத்துரைக்கிறது.
சென்டூ அடிப்படை முறைமையை நிறுவுதல்
நிலை3 ஐ நிறுவி உள்ளமைத்த பின்னர் சிறும சூழல் கிடைப்பதற்காக அடிப்படை முறைமை அமைக்கப்படுகிறது.
லினக்சு கருநிரல் உள்ளமைத்தல்
லினக்சு கருநிரல் ஒவ்வொரு பகுத்தளிப்புகளுக்கும் கருவாகும். இந்த பகுதி கருநிரல் எவ்வாறு உள்ளமைப்பது என்பதை விளக்குகிறது.
முறைமையை உள்ளமைத்தல்
சில முக்கியமான உள்ளமைவுக் கோப்புகளை உருவாக்க வேண்டும். இந்த பகுதி இவ்வகையான கோப்புகளைப் பற்றிய கண்ணோட்டத்தையும் எவ்வாறு சிறப்பாக உள்ளமைப்பது என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
முறைமை கருவிகளை நிறுவுதல்
இப்பகுதியில் சில முக்கியமான கருவிகள் தேர்ந்தெடுத்து நிறுவப்படுகிறது.
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
இப்பகுதியில் சரியான துவக்க ஏற்றி நிறுவப்பட்டு உள்ளமைக்கப்படுகிறது.
நிறுவலை முடித்தல்
நிறுவல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. இறுதிகட்டப் பணிகள் இதில் கூறப்பட்டுள்ளது.

ஜென்டூவோடு வேளை செய்தல்

Portage முன்னுரை
தங்கள் முறைமையில் உள்ள மென்பொருட்களை பராமரிக்க படிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய எளிய வழிமுறைகளை பற்றி இந்த பக்கம் எடுத்துரைக்கிறது.
USE கொடிகள்
USE கொடிகள் சென்டூவின் மிக முக்கியமான கூறாகும். இந்த பக்கத்தில் படிப்பவர்கள் எவ்வாறு USE கொடிகள் வேளை செய்கிறது என்பதை அறிந்தும் இவ்வகை USE கொடிகள் எவ்வாறு முறைமையோடு ஊடாடுகிறது என்பதை புரிந்தும் கொள்ளலாம்.
Portage தனிச்சிறப்புகள்
பகுத்தளிக்கப்பட்ட தொகுத்தலுக்கான ஆதரவு, ccache மற்றும் பல Portage இன் தனிச்சிறப்புகளை கண்டறியலாம்.
Init குறுநிரல் முறைமை
சென்டூ தனித்துவமான init குறுநிரல் வடிவமைப்பை பயன்படுத்துகிறது. இது மற்ற சிறப்புக்கூறுகளோடு சார்நிலையால்-இயக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மெய்நிகர் init குறுநிரல் ஆகியவற்றை அனுமதிக்கிறது. இந்த பக்கம் இவற்றின் எல்லா கூறுகளை பற்றியும் இவவகை ஆணைத்தொடர்களை எவ்வாறு கையாளுவது என்பதை பற்றியும் விவரிக்கிறது.
சூழல் மாறிகள்
சூழல் மாறிகளை சென்டூவோடு எளிமையாக கையாள முடியும். இதை எவ்வாறு செய்வது என்பதை பற்றியும் அதிகம் பயன்படுத்தப்படும் மாறிகளை பற்றயும் இந்த பக்கம் எடுத்துரைக்கிறது.

Portage ஓடு வேளை செய்தல்

கோப்புகள் மற்றும் அடைவுகள்
Portage பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ள, முதலில் அது கோப்புகள் மற்றும் தரவுகளை எங்குச் சேமிக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும்.
மாறிகள்
உள்ளமைவுக் கோப்பில் சில விருப்பத்தேர்வுகளை அமைப்பது மூலமாகவும், சூழல் மாறிகளாகவும், Portage ஐ முழுமையாக உள்ளமைக்க முடியும்.
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
சென்டூ மென்பொருட்களை நிலைப்புத்தன்மை மற்றும் கட்டமைப்புக்கான ஆதரவு ஆகியவற்றை பொருத்து வெவ்வேறு கிளைகளாகப் பிரித்தளிக்கிறது. "மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்" என்னும் பகுதி இவ்வகையான கிளைகளை எவ்வாறு உள்ளமைப்பது மற்றும் தனித்தனியாக இவற்றை எவ்வாறு மேலெழுதுவது என்பதைப் பற்றி விவரிக்கிறது.
கூடுதல் கருவிகள்
சென்டூ பயன்பாட்டை இன்னும் மேம்படுத்துவதற்கான சில கூடுதல் கருவிகளை Portage கொண்டுள்ளது. dispatch-conf மற்றும் பல கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்துகொள்ள இதைப் படிக்கவும்.
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
தனிப்பயன் தொகுப்பு கருவூலத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தேவையான தொகுப்புகளை எவ்வாறு ஒத்திசைப்பது, எவ்வாறு தொகுப்புகளை உட்செலுத்துவது போன்றவற்றுக்கான உதவிகுறிப்புகளை இந்த பகுதி உங்களுக்கு அளிக்கிறது.
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
காலங்கள் செல்ல செல்ல, Portage தன்னை பரிணமித்துக் கொண்டு முதிர்ச்சியடைகிறது. புதிய தனிச்சிறப்புகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலும் அவை மிகவும் அனுபவமுள்ள பயனர்களுக்கே பயனளிக்கிறது. இந்த பகுதியில் Portage இன் சில புதிய தனிச்சிறப்புகளைக் காணலாம்.


சென்டூ வலையாக்க உள்ளமைவு

தொடங்குதல்
பெரும்பாலான பொது சூழல்களில் விரைவாக வலையமைப்பு இடைமுகத்தைத் தொடங்கி ஓடச் செய்வது பற்றி விவரிக்கும் வழிகாட்டி.
மேம்பட்ட உள்ளமைவு
உள்ளமைவு எவ்வாறு வேளை செய்கிறது என்பதை இங்கு நாம் அறிந்துகொள்ளலாம். மட்டு வலையமாக்கலுக்கு தொடர்ந்து செல்வதற்கு முன் இதனை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.
மட்டு வலையமாக்கல்
பலவகை DHCP வாங்கிகளை எவ்வாறு தேர்வு செய்வது, பிணைத்தலை அமைப்பது, பாலமிடல், VLAN கள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
கம்பியில்லா
கம்பியில்லா வலையமைப்பிற்காக சென்டூவை உள்ளமைத்தல்.
செயல்பாடுகளை சேர்த்தல்
சாகச விரும்பிகள் வலையமைப்பு கருவிகளுக்கு தங்கள் சோந்த செயல்பாடுகளை சேர்க்கலாம்.
இயக்கநிலை மேலாண்மை
மடிக்கணினி பயனர்களுக்கும் அடிக்கடி கணினியைப் பல வலையமைப்புகளுக்கு மாற்றுபவர்களுக்குமான கட்டுரை.




This page is based on a document formerly found on our main website gentoo.org.
The following people contributed to the original document: Grant Goodyear, Roy Marples, Daniel Robbins, Chris Houser, Jerry Alexandratos, Seemant Kulleen, Tavis Ormandy, Jason Huebel, Guy Martin, Pieter Van den Abeele, Joe Kallar, John P. Davis, Pierre-Henri Jondot, Eric Stockbridge, Rajiv Mangliani, Jungmin Seo, Stoyan Zhekov, Jared Hudson, Colin Morey, Jorge Paolo, Carl Anderson, Jon Portnoy, Zack Gilburd, Jack Morgan, Benny Chuang, Erwin, Joshua Kinard, Tobias Scherbaum, Xavier Neys, Joshua Saddler, Gerald J. Normandin Jr., Donnie Berkholz, Ken Nowack, Lars Weiler
They are listed here because wiki history does not allow for any external attribution. If you edit the wiki article, please do not add yourself here; your contributions are recorded on each article's associated history page.

ஜென்டூவை alpha என்னும் கட்டமைப்பில் நிறுவுதல் மற்றும் உள்ளமைத்தல் பற்றி எடுத்துரைக்கும் கையேடு.