கையேடு:IA64/Portage/மாறிகள்
Portage உள்ளமைவு
முன்பு குறிப்பிட்டது போல், Portage ஐ பல மாறிகளைக் கொண்டு உள்ளமைக்கலாம். இதற்கு அவற்றை /etc/portage/make.conf என்னும் கோப்பிலோ அல்லது /etc/portage/ இடத்தில் உள்ள எதாவதொரு துணை அடைவிலோ வரையறுக்கப்பட வேண்டும். இதைப்பற்றிய கூடுதல் மற்றும் முழு தகவல்களுக்கு make.conf கோப்பையும் Portage ற்கான கைமுறை பக்கத்தையும் காணவும்:
user $
man make.conf
user $
man portage
கட்டு-சார்ந்த விருப்பத்தேர்வுகள்
உள்ளமைத்தல் மற்றும் தொகுப்பி விருப்பத்தேர்வுகள்
Portage ஆனது செயலிகளைக் கட்டும்போது, பின்வரும் மாறிகளின் உள்ளடக்கத்தை தொகுப்பியில் செலுத்தி குறுநிரலை உள்ளமைக்கிறது:
- CFLAGS மற்றும் CXXFLAGS
- C மற்றும் C++ தொகுத்தலுக்கான விரும்பிய தொகுப்பி கொடிகளை வரையறுக்கிறது.
- CHOST
- செயலியின் உள்ளமைவு குறுநிரலுக்கான கட்டு புரவலன் தகவல்களை வரையறுக்கிறது
- MAKEOPTS
- இது make கட்டளையில் அளிக்கப்படும். பொதுவாக இது தொகுத்தல் செயலின் போது பயன்படுத்தப்படும் இணை செயல்களின் அளவை வரையறுக்க அமைக்கப்படுகிறது. make கட்டளையின் விருப்பத்தேர்வுகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை make கைமுறை பக்கத்தில் காணலாம்.
USE மாறியானது உள்ளமைத்தல் மற்றும் தொகுத்தலின் போதும் பயன்படும். இதைபற்றி முழுமையாக முன்புள்ள பாகத்தில் விளக்கி உரைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாக்குதல் விருப்பத்தேர்வுகள்
Portage ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் புதிய பதிப்பை நிறுவும்போது அதன் பழைய பதிப்பின் வழக்கொழிந்த கோப்புகளை முறைமையிலிருந்து நீக்கும். இது பழைய பதிப்பை நீக்குவதற்கு முன் பயனருக்கு 5 வினாடி காலக்கெடுவை அளிக்கும். இந்த 5 வினாடி இடைவெளி CLEAN_DELAY மாறியால் தீர்மானிக்கப்படுகிறது.
EMERGE_DEFAULT_OPTS மாறியை அமைப்பதன் மூலம் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகளை ஒவ்வொரு முறை இயக்கும்போதும் பின்பற்றுமாறு emerge இடம் தெரிவிக்கலாம். --ask
, --verbose
, --tree
ஆகியவை சில பயனுள்ள விருப்பத்தேர்வுகளாகும்.
உள்ளமைவு கோப்பு பாதுகாப்பு
Portage-பாதுகாக்கப்பட்ட இருப்பிடங்கள்
கோப்புகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் சேமிக்கப்படாமல் இருந்தால் Portage மென்பொருளின் புதிய பதிப்பால் அளிக்கப்படும் கோப்புகளை கொண்டு மேலெழுதும். இந்த பாதுகாக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் CONFIG_PROTECT மாறியில் வரையறுக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் உள்ளமைவு கோப்புகளின் இருப்பிடங்களாக இருக்கும். அடைவு பட்டியல் இடைவெளிகளால் பிரிக்கப்பட்டது.
இத்தகைய பாதுகாக்கப்பட்ட இருப்பிடத்தில் எழுதப்படும் கோப்பு மறுபெயரிடப்பட்டு உள்ளமைவு கோப்பின் புதிய பதிப்பு இருப்பதை பற்றிய எச்சரிக்கை பயனருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இப்போதைய CONFIG_PROTECT அமைப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு, emerge --info இன் வெளியீட்டைப் பயன்படுத்தவும்:
user $
emerge --info | grep 'CONFIG_PROTECT='
Portage இன் உள்ளமைவு கோப்பு பாதுகாப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் emerge கைமுறை பக்கத்தில் உள்ள CONFIGURATION FILES பிரிவில் கிடைக்கும்:
user $
man emerge
அடைவுகளை தவிர்த்தல்
பாதுகாக்கப்பட்ட இடங்களில் உள்ள சில குறிப்பிட்ட துணை அடைவுகளின் பாதுகாப்பை நீக்க, CONFIG_PROTECT_MASK மாறியைப் பயனர்கள் பயன்படுத்தலாம்.
பதிவிறக்க விருப்பத்தேர்வுகள்
சேவையக இருப்பிடங்கள்
கோரப்பட்ட தகவல் அல்லது தரவு முறைமையில் இல்லையென்றால் இணையத்தில் இருந்து Portage கொணர்ந்து வரும். பல்வேறு தகவல்கள் மற்றும் தரவு அலைதடங்களுக்கான சேவையக இருப்பிடங்கள் பின்வரும் மாறிகளால் வரையறுக்கப்படுகிறது:
- GENTOO_MIRRORS
- மூலநிரல் கோப்புகளை (distfiles) கொண்டுள்ள சேவையக இருப்பிடங்களின் பட்டியலை வரையறுக்கிறது.
- PORTAGE_BINHOST
- முறைமைக்கான முன்-கட்டப்பட்ட தொகுப்புகளைக் கொண்டுள்ள குறிப்பிட்ட சேவையக இருப்பிடத்தை வரையறுக்கிறது.
மூன்றாவது அமைப்பானது, பயனர்கள் தங்கள் உள்ளூர் சென்டூ களஞ்சியத்தைப் புதுப்பிக்க பயன்படுத்தும் rsync சேவையகத்தின் இருப்பிடத்தை உள்ளடக்கியது. இது /etc/portage/repos.conf கோப்பில் (அல்லது அடைவினுள் உள்ள கோப்பில்) வரையறுக்கப்படுகிறது:
- sync-type
- சேவையகத்தின் வகை மற்றும்
rsync
ற்கான முன்னிருப்புகள் ஆகியவற்றை வரையறுக்கிறது. - sync-uri
- சென்டூ கருவூலத்திலிருந்து எடுத்துக் கொண்டு வருவதற்கு Portage பயன்படுத்தும் குறிப்பிட்ட சேவையகத்தை வரையறுக்கிறது.
GENTOO_MIRRORS, sync-type மற்றும் sync-uri மாறிகளை mirrorselect செயலியின் மூலம் தானியக்கமாக அமைக்க இயலும். ஐயத்திற்கு இடமின்றி, இதைப் பயன்படுத்துவதற்கு முன் app-portage/mirrorselect நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு, mirrorselect இன் எழிவரி உதவியைப் பார்க்கவும்:
root #
mirrorselect --help
சூழலுக்கு பதிலி சேவையகத்தின் பயன்பாடு தேவைப்பட்டால், http_proxy, ftp_proxy மற்றும் RSYNC_PROXY மாறிகளை அறிவித்துக்கொள்ளலாம்.
Fetch கட்டளைகள்
மூலநிரல் கோப்புகளை எடுத்துக் கொண்டு வருவதற்கு Portage ஆனது wget ஐ இயல்பாகப் பயன்படுத்துகிறது. இதை FETCHCOMMAND மாறி மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
Portage ஆல், பகுதியளவில் பதிவிறக்கப்பட்ட மூலநிரல் கோப்புகளை மீண்டும் தொடர இயலும். இது இயல்பாக wget ஐ பயன்படுத்துகிறது எனினும் இதை RESUMECOMMAND மாறி மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
FETCHCOMMAND மற்றும் RESUMECOMMAND மாறிகள் மூலநிரலை சரியான இடத்தில் சேமித்து வைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். மாறியினுள் மூலநிரல் இருப்பிடத்தையும் பகிர்நதளிப்பு கோப்புகளின் இருப்பிடத்தையும் அமைப்பதற்கு முறையே \${URI} மற்றும் \${DISTDIR} மாறிகளை பயன்படுத்தலாம்.
FETCHCOMMAND_HTTP, FETCHCOMMAND_FTP, RESUMECOMMAND_HTTP, RESUMECOMMAND_FTP மற்றும் பலவற்றை கொண்டு நெறிமுறை-சார்ந்த கையாளு நிரல்களை வரையறுக்கவும் வாய்ப்புள்ளது.
Rsync அமைப்புகள்
சென்டூ கருவூலத்தை இற்றைப்படுத்த Portage பயன்படுத்தும் rsync கட்டளையை மாற்றியமைக்க வாய்ப்பில்லை என்றாலும் rsync கட்டளைக்கு தொடர்புடைய சில மாறிகளை அமைக்க முடியும்:
- PORTAGE_RSYNC_OPTS
- ஒத்திசைவின்போது பயன்படுத்தப்படும் முன்னிருப்பு மாறிகளின் எண்ணிக்கையை அமைக்கிறது. ஒவ்வொன்றும் இடைவெளியால் பிரிக்கப்பட்டது. இதைப்பற்றி நன்கு அறிந்தால் மட்டுமே இதை மாற்றியமைக்கவும். PORTAGE_RSYNC_OPTS மாறி வெற்றிடமாக இருந்தால் கூட குறிப்பிட்ட சில விருப்பத்தேர்வுகள் எப்போதும் பயன்படுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- PORTAGE_RSYNC_EXTRA_OPTS
- ஒத்திசைவின் போது கூடுதல் விருப்பத்தேர்வுகளை அமைப்பதற்கு இது பயன்படும். ஒவ்வொரு விருப்பத்தேர்வும் இடைவெளியால் பிரிக்கப்பட்டதாகும்:
--timeout=<எண்>
- இது rsync ஒரு தொடர்பானது நேர முடிவு அடைந்துவிட்டது எனக் கருதுவதற்கு முன் எவ்வளவு நேரம் rsync தொடர்பு காத்திருப்பில் இருப்பதற்கான வினாடிகளின் எண்ணிக்கையை வரையறுக்கிறது. இது
180
இல் முன்னிருப்பாக உள்ளது. எனினும் அழைப்புவழி மற்றும் மெதுவாக வேலை செய்யும் கணினிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் இதை300
அல்லது அதற்கும் மேல் அமைக்கலாம். --exclude-from=/etc/portage/rsync_excludes
- இது இற்றைப்படுத்தலின்போது rsync ஆனது தவிர்க்க வேண்டிய தொகுப்புகள் மற்றும்/அல்லது பகுப்புகளின் பட்டியலைக் கொண்டுள்ள கோப்பை சுட்டிக்காட்டுகிறது. இந்த வழக்கில், இது /etc/portage/rsync_excludes ஐ சுட்டிக்காட்டுகிறது.
--quiet
- திரையில் வெளிவரும் வெளியீட்டின் அளவை குறைக்கும்.
--verbose
- முழு கோப்பு பட்டியலைத் திரையில் அச்சிடும்.
--progress
- ஒவ்வொரு கோப்பிற்கான முன்னேற்ற மானியைத் திரையில் காட்டுகிறது.
- PORTAGE_RSYNC_RETRIES
- இது rsync ஆனது அதிகப்படியாக எத்தனை முறை SYNC மாறியால் அளிக்கப்பட்ட கண்ணாடிதளத்தோடு இணைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதை வரையறுக்கிறது. இதன் முன்னருப்பு மதிப்பு
3
முறை.
இந்த விருப்பத்தேர்வுகளைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு, rsync இன் கைமுறை பக்கத்தைப் படிக்கவும்:
சென்டூ உள்ளமைவு
கிளை தேர்ந்தெடுத்தல்
ACCEPT_KEYWORDS மாறியை கொண்டு முன்னிருப்பு கிளையை மாற்றியமைக்க முடியும். இது முன்னிருப்பாக கட்டமைப்பின் நிலையான கிளையை தேர்வு செய்யும். சென்டூவின் கிளைகளை பற்றிய மேலும் தகவல்களை அடுத்த பகுதியில் காணலாம்.
Portage இன் தனிச்சிறப்புகள்
குறிப்பிட்ட சில portage தனிச்சிறப்புகளை FEATURES மாறியை கொண்டு செயல்படுத்த முடியும். Portage இன் தனிச்சிறப்புகளை பற்றி முந்தைய பகுதியில் ஏற்கனவே விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Portage இன் நடத்தை
வள மேலாண்மை
PORTAGE_NICENESS மாறியை கொண்டு பயனர்களால் portage இயக்கத்தின் மென்மை மதிப்பை கூட்டவோ குறைக்கவோ செய்ய இயலும். PORTAGE_NICENESS மதிப்பு இப்போதுள்ள மென்மை மதிப்போடு சேர்க்கப்படும்.
nice மதிப்புகளைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு, nice இன் கைமுறை பக்கத்தைக் காணவும்:
user $
man nice
வெளியீடு நடத்தை
NOCOLOR மாறியானது false
மதிப்பை முன்னிருப்பாகக் கொண்டுள்ளது. இது வண்ணமிடப்பட்ட வெளியீட்டைப் பயன்படுத்துவதை Portage முடக்க வேண்டுமா என்பதை வரையறுக்கிறது.