Handbook:X86/Blocks/Booting/ta
நிறுவல் ஊடகத்தை துவக்குதல்
நிறுவல் ஊடகம் ஆயத்தமானதால் இப்போது அதைத் துவக்கலாம். ஊடகத்தை முறைமைக்குள் சொருகி, மறு இயக்கி பின் தாய் பலகையின் திடப்பொருள் பயனர் இடைமுகத்திற்குள் நுழையவும். இதற்குள் செல்ல திறன் இணைப்பு சுய-பரிசோதனை (POST) அதாவது கணினி மீண்டும் தொடங்கும்போது DEL, F1, F10 அல்லது ESC போன்ற விசைப்பலகையில் உள்ள விசைகளை அழுத்தவும். இந்த 'தூண்டுதல்' விசை என்பது முறைமை மற்றும் தாய் பலகையைப் பொருத்து மாறுபடும். எதை அழுத்த வேண்டும் எனத் தெளிவாகத் தெரியவில்லையென்றால் இணையத் தேடு பொறியில் தாய் பலகையின் ஒப்புரு பெயரை இட்டு ஆய்வு செய்யவும். பதில்களை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். தாய் பலகையின் திடப்பொருள் சிறுபட்டிக்குள் சென்றவுடன் உள் வட்டு சாதனங்களை முயற்சி செய்வதற்கு முன் வெளி துவக்கவல்ல ஊடகத்தைத் துவக்கும் வகையில் துவக்க வரிசையை மாற்றவும். இதைச் செய்யாமல் விட்டால், வெளி துவக்க ஊடகம் இருப்பதை அறியாமல் முறைமை மீண்டும் உள் வட்டு சாதனத்தைத் துவக்கும்.
BIOS ற்கு பதிலாக UEFI இடைமுகத்தைப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஜென்டூவை நிறுவினால், UEFI உடன் உடனடியாக துவக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் ஜென்டூ லினக்ஸ் நிறுவலை முடிக்கும் முன் ஒரு துவக்கவல்ல UEFI USB குச்சியை (அல்லது வேறு ஊடகத்தை) உருவாக்குவதற்கான தேவை ஏற்படும்.
இன்னும் செய்யவில்லை என்றால், நிறுவல் ஊடகம் முறைமையில் சொருகப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின் மறு இயக்கவும். இப்போது உங்கள் முன் ஒரு துவக்கத் தூண்டி தோன்றும். இதில் Enter விசையை அழுத்தினால் முன்னிருப்பு துவக்க விருப்பத்தேர்வுகளுடன் துவக்கச் செயல்முறை துடங்கும். தனிப்பயன் துவக்க விருப்பத்தேர்வுகளுடன் நிறுவல் ஊடகத்தைத் துவக்க விரும்பினால், ஒரு கர்னலை அதற்குரிய விருப்பத்தேர்வுகளோடு (கர்னலுக்கு அடுத்து) குறிப்பிட்டு பின் Enter ஐ தட்டவும்.
மேல் கூறியவாறு ஜென்டூ கர்னல் எல்லா சூழலிலும் நாம் விருப்பத்தேர்வுகளைக் குறிப்பிடாத போதிலும் சிறப்பாகச் செயல்படும். துவக்க பழுதுகண்டு நீக்கல் மற்றும் வல்லுநர் விருப்பத்தேர்வுகளுக்கு, தொடர்ந்து இந்த பிரிவில் செல்லவும். இல்லையென்றால், Enter ஐ அழுத்தி அடுத்த பிரிவான கூடுதல் வன்பொருள் உள்ளமைவு க்கு செல்லவும்.
துவக்கத் தூண்டியில், பயனர்கள் விரும்பினால் கிடைக்கும் கர்னல்கள் (F1) மற்றும் துவக்க விருப்பத்தேர்வுகளை (F2) திரையிடச் செய்யும் வாய்ப்பை பெறுகின்றனர். 15 வினாடிகளில் எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால் (தகவல்களைக் காணுதல் அல்லது கர்னலை தேர்ந்தெடுத்தல்) நிறுவல் ஊடகம் வட்டிலிருந்து துவங்கத் தொடங்கிவிடும். இதன்மூலம் குறுந்தகட்டை வெளியே எடுக்காமல் நிறுவலின்போது மறு இயக்கம் செய்து பின் நிறுவிய சூழலைச் சோதித்துப் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது (தொலைநிலை நிறுவலில் இது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது).
கர்னலை எவ்வாறு குறிப்பிடுவது என்பதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறும குறுந்தகட்டில் இரண்டு முன் வரையறுக்கப்பட்ட கர்னல் துவக்க விருப்பத்தேர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முன்னிருப்பு விருப்பத்தேர்வான gentoo மற்றும் -nofb திரிபு. இறுதியாகக் கூறிய திரிபு கர்னல் சட்ட இடையகத்திற்கான (framebuffer) ஆதரவை முடக்குகிறது.
அடுத்த பகுதியில் கிடைக்கப்படும் கர்னல் மற்றும் அதன் விளக்கங்கள் ஆகியவற்றின் சிறு மேலோட்டத்தைக் காணலாம்:
கர்னல் தேர்வுகள்
- gentoo
- K8 (NUMA ஆதரவை உட்பட) மற்றும் EM64T ரக CPU க்களுக்கான ஆதரவுடன் கூடிய முன்னிருப்பு கர்னல்.
- gentoo-nofb
- gentoo வை போல், ஆனால் சட்ட இடையக (framebuffer) ஆதரவு இல்லாமல்.
- memtest86
- உள்ளூர் RAM ல் பிழை உள்ளதா என சோதித்தல்.
கர்னலுடன் சேர்ந்து, துவக்க விருப்பத்தேர்வுகள் துவக்கச் செயல்முறையை மேலும் மெருகேற்ற உதவுகிறது.
வன்பொருள் விருப்பத்தேர்வுகள்
- acpi=on
- இது ACPI ற்கான ஆதரவை ஏற்றி குறுந்தகடு துவக்கத்தின் போது acpid மறைநிரலை தொடங்கச் செய்கிறது. முறைமைக்கு ACPI பயன்பாடு முறையாக இயங்கவேண்டும் என்ற தேவை இருந்தால் மட்டுமே இது தேவை. உயர்-இழையாக்கல் ஆதரவிற்கு இது தேவையில்லை.
- acpi=off
- முழுமையாக ACPI ஐ முடக்குகிறது. சில பழைய முறைமைகளில் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது APM பயன்பாட்டிற்கு ஒரு தேவையாகும். இந்த செயல் உங்கள் கணிப்பியின் உயர்-இழையாக்க ஆதரவை முடக்கும்.
- console=X
- இது தொடர் முனைய அணுகலை குறுந்தகட்டிற்கு அளிக்கிறது. இதில் முதல் விருப்பத்தேர்வாக இருப்பது சாதனமாகும் (பொதுவாக ttyS0). இதை தொடர்ந்து வருவது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட ஏதாவது ஒரு இணைப்பு விருப்பத்தேர்வுகளாகும். இதன் முன்னிருப்பு விருப்பத்தேர்வுகள் 9600,8,n,1.
- dmraid=X
- 'சாதன-வரைபடமாக்கி RAID துணை முறைமையில்' விருப்பத்தேர்வுகளை அணுப்ப அனுமதிக்கிறது. விருப்பத்தேர்வை மேற்கோள் குறிக்குள் இட வேண்டும்.
- doapm
- APM இயக்கியிற்கான ஆதரவை ஏற்றுகிறது. இதற்கு
acpi=off
என்னும் நிலை தேவை. - dopcmcia
- PCMCIA மற்றும் Cardbus வன்பொருளுக்கான ஆதரவை ஏற்றுகிறது. குறுந்தகடு துவக்கத்தின் போது pcmcia cardmgr போன்றவற்றை தொடங்கச் செய்கிறது. PCMCIA/Cardbus சாதனங்களிலிருந்து துவங்கும் போது மட்டும் இது தேவை.
- doscsi
- இது பெரும்பாலான SCSI கட்டுப்படுத்திக்கான ஆதரவை ஏற்றுகிறது. மேலும் பெரும்பாலான USB சாதனங்கள் கர்னலின் SCSI துணை-முறைமையை பயன்படுத்துவதால், இது அவற்றை துவக்குவதற்கு வேண்டிய தேவையாகும்.
- sda=stroke
- இது BIOS பெரிய வட்டுக்களை கையாள முடியாத நிலையில் பயனரை மொத்த வன்தகட்டையும் பகிர்மானம் செய்ய அனுமதிக்கிறது. இந்த விருப்பத்தேர்வு பழைய BIOS உள்ள இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. sda என்பதற்கு பதிலாக இந்த விருப்பத்தேர்வின் தேவையுள்ள சாதனத்தை குறிப்பிடவும்.
- ide=nodma
- இது கர்னலில் உள்ள DMA வின் முடக்கத்தை கட்டாயப்படுத்துகிறது. சில IDE சில்லுதொகுதிகள் மற்றும் CDROM இயக்கிகளுக்கு இது தேவைப்படுகிறது. IDE CDROM இல் இருப்பதை முறைமை படிக்க சிரமப்பட்டால் இந்த விருப்பத்தேர்வை முயற்சி செய்யவும். மேலும் இது முன்னிருப்பு hdparm அமைப்புகள் செயலாக்குவதை முடக்குகிறது.
- noapic
- இது புதிய தாய் பலகைகளில் உள்ள மேம்பட்ட நிரல்படு குறுக்கீடு கட்டுப்படுத்தி (APIC) ஐ முடக்குகிறது. சில பழைய வன்பொருட்களில் இது சில சிக்கல்களை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.
- nodetect
- இது சாதன தானியக்க-கண்டறிதல் மற்றும் DHCP பரிசோதனை போன்ற குறுந்தகட்டால் மேற்கொள்ளப்படும் எல்லா தானியக்க-கண்டறிதல் செயல்முறைகளையும் முடக்குகிறது. இது தோல்வியுறும் குறுந்தகடு அல்லது இயக்கியை வழுநீக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
- nodhcp
- DHCP கண்டறியபட்ட வலையமைப்பு அட்டைகளை பரிசோதிப்பதை முடக்குகிறது. நிலையான முகவரியை மட்டுமே கொண்டுள்ள வலையமைப்புகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
- nodmraid
- இது ஆன்-போர்டு IDE/SATA RAID கட்டுப்படுத்திகளில் பயன்படுத்தபடும் 'சாதன-வரைபடமாக்கி RAID துணை முறைமை' க்கான ஆதரவை முடக்குகிறது.
- nofirewire
- இது தீகம்பி கூறுகள் ஏற்றுவதை முடக்குகிறது. உங்கள் தீகம்பி வன்பொருள் குறுந்தகட்டை துவக்குவதில் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தினால் மட்டுமே இது தேவைப்படும்.
- nogpm
- gpm முனைய சுட்டி ஆதரவை முடக்குகிறது.
- nohotplug
- இது hotplug மற்றும் coldplug init ஆணைத்தொடர்கள் ஏற்றுவதை முடக்குகிறது. இது தோல்வியுறும் குறுந்தகடு அல்லது இயக்கியை வழுநீக்கும்போது பயனுள்ளதாக இருக்கும்.
- nokeymap
- US அல்லாத விசைபலக தளவமைப்புக்களை தேர்ந்தெடுக்க பயன்படும் விசை வரைபட தேர்வை முடக்குகிறது.
- nolapic
- உள்ளூர் APIC மற்றும் Uniprocessor கர்னல்களை முடக்குகிறது.
- nosata
- இது தொடர் ATA (SATA) கூறுகள் ஏற்றுவதை முடக்குகிறது. SATA துணை முறைமையோடு முறைமைக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது இதைப் பயன்படுத்தலாம்.
- nosmp
- இது SMP-இயக்கப்பட்ட கர்னல்களில் உள்ள SMP அல்லது சமச்சீரான பல செயலாக்கம் (Symmetric Multiprocessing) ஐ முடக்குகிறது. இது சில தாயப்பலகைகள் மற்றும் இயக்கிகளில் வரும் SMP சார்ந்த சிக்கல்களை வழுநீக்குவதற்கு இது பயன்படும்.
- nosound
- இது ஒலி ஆதரவு மற்றும் ஒலியளவு அமைப்புகள் ஆகியவற்றை முடக்குகிறது. ஒலியமைப்பால் பிரச்சனை வரும் முறைமைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
- nousb
- இது USB கூறுகள் தானாக ஏற்றுவதை முடக்குகிறது. USB சிக்கல்களின் வழுநீக்கலின்போது பயனுள்ளதாக இருக்கும்.
- slowusb
- இது IBM BladeCenter போன்ற மெதுவான USB CDROMs களின் துவக்கச் செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் சில கூடுதல் இடைநிறுத்தங்களைச் சேர்க்கிறது.
ஏரண கனவளவு/சாதன மேலாண்மை
- dolvm
- லினக்ஸின் ஏரண கனவளவு மேலாண்மைக்கான ஆதரவை செயல்பட வைக்கிறது.
மற்ற விருப்பத்தேர்வுகள்
- debug
- வழுநீக்கலை செயல்படுத்துகிறது. ஏராளமான தரவுகளை திரையில் ஏற்றுவதால் இது குழப்பமானதாக மாற வாய்ப்புள்ளது.
- docache
- இது குறுந்தகட்டின் மொத்த இயக்குநேர பாகத்தையும் RAM இனுள் இடைமாற்று செய்கிறது. இந்த விருப்பத்தேர்விற்கு குறைந்தது குறுந்தகட்டை விட இரண்டு மடங்கு RAM தேவை.
- doload=X
- இது தொடக்க ram வட்டை (initial ramdisk) ஏதாவது பட்டியலிடப்பட்ட கூறு மற்றும் அதனை சார்ந்துள்ளவைகளை ஏற்ற செய்கிறது. X ற்கு பதிலாக கூறு பெயரை இடவும். காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பட்டியலாக பல கூறுகளை குறிப்பிடலாம்.
- dosshd
- இது ஆளில்லாத நிறுவல்களுக்கு பயன்படுத்தப்படும் sshd ஐ துவக்கத்தில் துடங்குகிறது.
- passwd=foo
- இது சம குறியீட்டை அடுத்து வருவதை வேர் கடவுச்சொல்லாக அமைக்கும். முன்னிருப்பாக வேர் கடவுச்சொல் கலக்கப்பட்டிருப்பதால் இது dosshd க்கு தேவைப்படும்.
- noload=X
- இது தொடக்க ram வட்டை (initial ramdisk) சிக்கலை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கூறு ஏற்றுவதைத் தவிர்க்க வைக்கிறது. doload தொடரியலை ஒத்தது.
- nonfs
- portmap/nfsmount துவக்கத்தில் துடங்குவதை முடக்குகிறது.
- nox
- இது X-செயல்படுத்தப்பட்ட நிகழ் குறுந்தகடு தானியக்கமாக X ஐ இயங்குவதற்குப் பதிலாக கட்டளை வரியை அளிக்க வைக்கிறது.
- scandelay
- இது மெதுவாக பயன்படுத்த கூடிய நிலைக்கு வரும் சாதனங்களுக்காக துவக்க செயல்முறையில் குறிப்பிட்ட பாகங்களில் குறுந்தகட்டை 10 வினாடிகளுக்கு நிறுத்தி வைக்கும்.
- scandelay=X
- இது மெதுவாகப் பயன்படுத்தக் கூடிய நிலைக்கு வரும் சாதனங்களுக்காகத் துவக்கச் செயல்முறையில் குறிப்பிட்ட பாகங்களில் குறுந்தகட்டைப் பயனர் குறிப்பிட்ட வினாடிகளுக்கு நிறுத்தி வைக்கும். X ற்கு பதிலாக நிறுத்தி வைப்பதற்கான வினாடி எண்ணிக்கையை இடவும்.
துவக்க வல்ல ஊடகம்
no*
விருப்பத்தேர்வை சரிபார்த்த பின் do*
விருப்பத்தேர்விற்கு வரும். இவ்வாறாக விருப்பத்தேர்வுகள் கூறிய அதே வரிசையில் மேலழுதிக்கொள்ளும்.இப்போது ஊடகத்தைத் துவக்கி கர்னல் (முன்னிருப்பான ஜென்டூ கர்னல் போதவில்லை என்றால்) மற்றும் துவக்க விருப்பத்தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, இங்கு நாங்கள் ஜென்டூ கர்னலை dopcmcia
என்னும் கர்னல் அளவுருவோடு துவக்கியுள்ளோம்:
boot:
gentoo dopcmcia
அடுத்து பயனர் ஒரு துவக்கத் திரை மற்றும் முன்னேற்றப்பட்டியுடன் வரவேற்கப்படுவார். US-அல்லாத விசைப்பலகையை கொண்ட முறைமையில் நிறுவல் தொடர்ந்தால், வெறுஞ்சொல்மயமான பயன்முறைக்கு மாற உடனடியாக Alt+F1 விசைக்கூட்டை அழுத்தி தூண்டியைப் பின்பற்றவற்றுவதை உறுதிப்படுத்தவும். 10 வினாடிகளுக்குள் எந்தவொரு தேர்வும் செய்யவில்லையென்றால் முன்னிருப்பான (US விசைப்பலகை) ஏற்றுக்கொள்ளப்பட்டுத் துவக்கச் செயல்பாடு மேற்கொண்டு தொடரும். துவக்கச் செயல்பாடு முடிந்தவுடன், பயனர் தானியக்கமாக "நிகழ்" ஜென்டூ லினக்ஸ் சூழலில் வேர் பயனர் அதாவது மீக பயனராக உள்நுழைந்திருப்பார். நடப்பு முனையத்தில் ஒரு வேர் தூண்டி காண்பிக்கப்பட்டிருக்கும். ஒருவர் Alt+F2, Alt+F3 மற்றும் Alt+F4 விசைக்கூட்டுகளை அழுத்துவதன் மூலம் மற்ற முனையங்களுக்கு மாறிக்கொள்ள முடியும். தொடங்கிய முனையத்திற்கே மீண்டும் வர Alt+F1 ஐ அழுத்தவும்.