Translations:Eclean/7/ta
From Gentoo Wiki
முன்னிருப்பாக மூல நிரல் கோப்புகள் /usr/portage/distfiles என்னும் அடைவிலும் இருநிலை தொகுதிகள் /usr/portage/packages என்னும் அடைவிலும் இருக்கும். DISTDIR மற்றும் PKGDIR மாறிகளை /etc/portage/make.conf கோப்பில் திருத்துவதன் மூலம் இந்த முன்னிருப்பு அடைவுகளை மாற்றிக்கொள்ளலாம். இவ்விரு இடங்களையும் கவனிக்காமல் விட்டால் கோப்புகள் வீணாகச் சேர்ந்து பெரிதாகிவிடும். இதனைச் சுத்தம் செய்வதற்குத் தான் eclean உருவாக்கப்பட்டது.