Translations:Handbook:AMD64/Installation/Base/2/ta
Chroot செய்தல்
DNS விவரங்களை நகலெடுத்து வைத்தல்
புதிய சூழலுக்குள் நுழைவதற்கு முன் இன்னும் ஒரு செயல் செய்ய வேண்டியுள்ளது. அது /etc/resolv.conf கோப்பில் உள்ள DNS விவரங்களை நகலெடுப்பதாகும். புதிய சூழலுக்குள் சென்ற பிறகும் வலையமைப்பு வேளை செய்வதை உறுதிசெய்துகொள்ள இது தேவையானதாகும். /etc/resolv.conf கோப்பு வலையமைப்பிற்கான பெயர்-சேவையகங்களைக் கொண்டுள்ளது.
இந்த தகவல்களை நகலெடுப்பதற்கு, cp கட்டளையைப் பயன்படுத்தும்போது --dereference
விருப்பத்தேர்வை அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம். ஒருவேளை /etc/resolv.conf என்பது ஒரு குறியீட்டுத் தொடுப்பாக இருந்தால் இதை நகலெடுக்காமல் இது காட்டும் இலக்கு கோப்பை நகலெடுக்கும். இல்லையென்றால், புதிய சூழலில் உள்ள குறியீட்டுத் தொடுப்பு இல்லாத ஒரு கோப்பை நோக்கி இருக்கும் (பெரும்பாலும் தொடுப்பு காட்டும் இலக்கு புதிய சூழலுக்குள் கிடைக்காமல் போகலாம்).
root #
cp --dereference /etc/resolv.conf /mnt/gentoo/etc/
தேவையான கோப்பு முறைமைகளை ஏற்றுதல்
இன்னும் சில நேரத்தில், லினக்சு வேர் புதிய இடத்திற்கு மாறிவிடும்.
கிடைக்கும்படி செய்ய வேண்டிய கோப்பு முறைமைகள்:
- /proc/ இது ஒரு போலி-கோப்பு முறைமையாகும். பார்ப்பதற்கு வழக்கமான கோப்புகள் போலத் தோன்றினாலும் இவை போகிற போக்கில் லினக்சு கருநிரலால் உருவாக்கப்பட்டது.
- /sys/ இதுவும் /proc/ ஐ போல் ஒரு போலி-கோப்பு முறைமையாகும். /proc/ விட மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ள இது ஒருகாலத்தில் இதற்கு மாற்றாகப் பார்க்கப்பட்டது.
- /dev/ என்பது எல்லா சாதனங்களையும் உள்ளடக்கிய வழக்கமான கோப்பு முறைமையாகும். இது லினக்சு சாதன மேலாளரால் (பொதுவாக udev) ஓரளவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.
- /run/ என்பது PID கோப்புகள் அல்லது பூட்டுகள் போன்ற இயக்க நேரத்தில் உற்பத்தியாகும் கோப்புகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு இடைக்கால கோப்பு முறைமையாகும்.
/proc/ இருப்பிடம் /mnt/gentoo/proc/ இன் மேல் ஏற்றப்படும். மற்றவை கட்டி-ஏற்றப்படுகிறது. இறுதியாகக் கூறப்பட்டதன் பொருள், எடுத்துக்காட்டாக, /mnt/gentoo/sys/ என்பது உண்மையில் /sys/ ஆக இருக்கும் (ஒரே கோப்பு முறைமையில் இது வெறும் இரண்டாவது நுழைவு புள்ளிதான்), ஆனால் /mnt/gentoo/proc/ பொருத்தவரை இது கோப்பு முறைமையில் (எடுத்துக்காட்டாக பேசுகையில்) உள்ள ஒரு புதிய ஏற்றுப்புள்ளியாகும்.
If using Gentoo's install media, this step can be replaced with simply: arch-chroot /mnt/gentoo.
root #
mount --types proc /proc /mnt/gentoo/proc
root #
mount --rbind /sys /mnt/gentoo/sys
root #
mount --make-rslave /mnt/gentoo/sys
root #
mount --rbind /dev /mnt/gentoo/dev
root #
mount --make-rslave /mnt/gentoo/dev
root #
mount --bind /run /mnt/gentoo/run
root #
mount --make-slave /mnt/gentoo/run
--make-rslave
செயல்பாடுகள் systemd ஆதரவிற்கு நிறுவலில் பின்னர் தேவைப்படும்.சென்டூ அல்லாத ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, இது போதாமல் போகலாம். சில வழங்கல்கள் /dev/shm ஐ /run/shm/ ற்கான குறியீட்டுத் தொடுப்பாக உருவாக்குகின்றன என்றாலும் இவை chroot செய்தபிறகு, செல்லாததாகி விடுகிறது. /dev/shm/ ஐ முறையான tmpfs ஏற்ற முன்னணியாகச் செய்வது இதைச் சரிசெய்யும்.
root #
test -L /dev/shm && rm /dev/shm && mkdir /dev/shm
root #
mount --types tmpfs --options nosuid,nodev,noexec shm /dev/shm
பயன்முறை 1777 அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
root #
chmod 1777 /dev/shm /run/shm
புதிய சூழலுக்குள் நுழைதல்
இப்போது எல்லா பகிர்வுகளும் துவக்கப்பட்டு அடிப்படை சூழல் நிறுவப்பட்டுவிட்டதால், புதிய நிறுவல் சூழலினுள் chroot செய்து நுழைவதற்கான நேரம் வந்துவிட்டது. இதன் பொருள், அமர்வானது அதன் வேரை (அணுகக்கூடியதிலேயே மிகவும் உயர்நிலை இருப்பிடம்) இப்போதுள்ள நிறுவல் சூழலில் (நிறுவல் குறுந்தகடு அல்லது மற்ற நிறுவல் ஊடகத்தில்) இருந்து நிறுவல் முறைமைக்கு (அதாவது துவக்கப்பட்ட பகிர்வுகளுக்கு) மாற்றும். வேரை மாற்றுவதால் (change root) இந்த செயலை chroot என அழைக்கிறோம்.
chroot செயலை மூன்று படிநிலைகளில் செய்து முடிக்கலாம்:
- வேர் இருப்பிடம் நிறுவல் ஊடகத்தில் உள்ள / இல் இருந்து பகிர்வுகளில் உள்ள /mnt/gentoo/ க்கு chroot மூலம் மாற்றப்படும்.
- source கட்டளையைப் பயன்படுத்தி /etc/profile இல் உள்ள சில அமைப்புகளை நினைவகத்தில் மறு ஏற்றப்படுகிறது.
- நாம் chroot சூழலுக்குள் உள்ளோம் என்பதை நினைவு படுத்த முதன்மை தூண்டியை மாற்றப்படுகிறது.
root #
chroot /mnt/gentoo /bin/bash
root #
source /etc/profile
root #
export PS1="(chroot) ${PS1}"
இந்த இடத்திலிருந்து, மேற்கொள்ளப்படும் எல்லா செயல்களும் உடனடியாக சென்டூ லினக்சு சூழலில் எதிரொளிக்கும்.
இந்த இடத்திற்குப் பிறகு எங்காவது சென்டூ நிறுவல் தடைப்பட்டால், இந்த படிநிலையிலிருந்து மீண்டும் தொடர கண்டிப்பாக வாய்ப்புள்ளது. வட்டை மீண்டும் பகிர்வு செய்ய வேண்டிய தேவையில்லை! எளிமையாக வேர் பகிர்வை ஏற்றிய பின் மேலுள்ள DNS தகவலை நகலெடுத்து வைத்தல் பிரிவில் கூறப்பட்டுள்ள படிநிலைகளைப் பின்பற்றி வேலைசெய்து கொண்டிருக்கும் சூழலுக்குள் மீண்டும் செல்லவும். மேலும் இது துவக்க ஏற்றிச் சிக்கல்களைத் தீர்க்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் தகவல்களை chroot கட்டுரையில் காணலாம்.
Preparing for a bootloader
Now that the new environment has been entered, it is necessary to prepare the new environment for the bootloader. It will be important to have the correct partition mounted when it is time to install the bootloader.
UEFI systems
For UEFI systems, was formatted with the FAT32 filesystem and will be used as the EFI System Partition (ESP). Create a new directory (if not yet created), and then mount ESP there:
root #
mkdir
root #
mount
DOS/Legacy BIOS systems
For DOS/Legacy BIOS systems, the bootloader will be installed into the directory, therefore mount as follows:
root #
mount
Portage ஐ உள்ளமைத்தல்
இணையத்தை கொண்டு சென்டூ ebuild கருவூல நொடிப்பெடுப்பை நிறுவுதல்
அடுத்த படிநிலை சென்டூ ebuild கருவூலத்தின் நொடியெடுப்பை நிறுவுதலாகும். இந்த நொடியெடுப்பானது கிடைக்கும் மென்பொருட்களின் தலைப்புகள் (நிறுவலுக்காக), எந்த தனியமைப்பை முறைமை மேலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும், தொகுப்பு அல்லது தனியமைப்பு சார்ந்த செய்தி உருப்படிகள் முதலியவற்றை Portage ற்கு தெரிவிக்கும் கோப்புகளின் திரள்களைக் கொண்டுள்ளது.
emerge-webrsync ஐ கட்டுப்படுத்தப்பட்ட தீயரண்களுக்கு பின்னால் உள்ளவர்களும் (இது நொடிப்பெடுப்பை பதிவிறக்குவதற்கு HTTP/FTP நெறிமுறையைப் பயன்படுத்துவதால்), வலையமைப்பு கற்றையகலத்தை சேமிக்க விரும்புவோர்களும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. வலையமைப்பு அல்லது கற்றையகல கட்டுப்படுத்தல்கள் எதுவும் இல்லாத படிப்பவர்கள் இதை வெளிப்படையாகத் தவிர்த்து அடுத்த பிரிவிற்குச் செல்லலாம்.
இது சென்டூவின் கண்ணாடி தளங்களுள் ஒன்றிலிருந்து அண்மை நொடியெடுப்பை (நாள் அடிப்படையில் வெளிவரும்) எடுத்துவந்து முறைமையில் நிறுவும்:
root #
emerge-webrsync
செயல்பாட்டின் போது, emerge-webrsync பயன்கூறு நிரலானது / இருப்பிடம் காணவில்லை என முறையிடலாம். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் இதைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை - கருவி அதற்குரிய இடத்தை உருவாக்கும்.
இந்த இடத்திலிருந்து, சில புதுப்பித்தல்களை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என Portage குறிப்பிடலாம். இதற்குக் காரணம், நிலை கோப்பு மூலம் நிறுவப்பட்ட முறைமை தொகுப்புகளுக்கான புதிய பதிப்புகள் இப்போது கிடைக்கப் பெறலாம்; கருவூல நொடியெடுப்பின் மூலம் புதிய தொகுப்புகளைப் பற்றி இப்போது Portage அறிந்திருக்கும். தொகுப்பு புதுப்பித்தல்களை இப்போதைக்கு தவிர்த்துக்கொள்ளலாம்; இதை சென்டூ நிறுவல் முடியும் வரை தள்ளிப் போடலாம்.
விரும்பினால்: கண்ணாடிகளை தேர்வு செய்தல்
மூலநிரல் கோப்புகளை விரைவாகப் பதிவிறக்க வேகமான கண்ணாடி தளத்தைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கிறோம். Portage make.conf கோப்பினுள் உள்ள GENTOO_MIRRORS மாறியைக் கண்டறிந்து அதில் பட்டியலிடப்பட்டுள்ள கண்ணாடி தளங்களைப் பயன்படுத்தும். சென்டூ கண்ணாடி பட்டியலில் முறைமை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள (பெரும்பாலும் வேகமானதாக இருக்கும் என்பதால்) கண்ணாடி தளத்தை (அல்லது கண்ணாடி தளங்களை) தேட முடியும். இதை எளிமையாக்கும் நோக்கில், நாங்கள் பயனர்களுக்கு நல்ல இடைமுகத்தைக் கொண்டுள்ள mirrorselect கருவியை அளிக்கிறோம். இதன்மூலம் தேவையான கண்ணாடி தளங்களைத் தேர்வு செய்யப் பட்டியலில் விருப்பமான கண்ணாடி தளங்களைக் கண்டறிந்து Spacebar விசையை அழுத்தி ஒன்று அல்லது அதற்கு மேல் உள்ள கண்ணாடி தளங்களைத் தேர்வு செய்யவும்.
A tool called mirrorselect provides a pretty text interface to more quickly query and select suitable mirrors. Just navigate to the mirrors of choice and press Spacebar to select one or more mirrors.
root #
mirrorselect -i -o >> /mnt/gentoo/etc/portage/make.conf
Alternatively, a list of active mirrors are available online.
விரும்பினால்: சென்டூ ebuild கருவூலத்தை புதுப்பித்தல்
சென்டூ ebuild கருவூலத்தை அண்மை பதிப்பிற்குப் புதுப்பிக்க வாய்ப்புள்ளது. முன் கூறிய emerge-webrsync கட்டளை மிக சமீபத்திய நொடிப்பெடுப்பை நிறுவியிருக்கும் (பெரும்பாலும் 24 மணிக்குள் வெளிவந்த), ஆகையால் இந்த படியை விரும்பினால் தொடரலாம்.
கடைசியாக வெளிவந்த தொகுப்பு புதுப்பித்தல்கள் தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம் (1 மணிக்கு முன்பு வரை வெளிவந்தவை). அப்போது emerge --sync ஐ பயன்படுத்தவும். இந்த கட்டளை rsync நெறிமுறையைப் பயன்படுத்தி சென்டூ ebuild கருவூலத்தை (emerge-webrsync கட்டளை மூலம் முன்னதாக எடுத்துவரப்பட்டதை) புதுப்பித்து முறைமையை அண்மை நிலையில் வைக்கிறது.
root #
emerge --sync
சட்ட இடையகங்கள் அல்லது தொடர் முனையங்கள் போன்ற மெதுவான முனையங்களில் செயல்பாடுகளை வேகப்படுத்த --quiet
விருப்பத்தேர்வைப் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கப்படுகிறது.
root #
emerge --sync --quiet
செய்தி உருப்படிகளை படித்தல்
சென்டூ ebuild கருவூலம் ஒத்திசைக்கும்போது, பின்வரும் செய்தியை ஒத்த தகவல் செய்திகளை Portage வெளியிடலாம்:
* IMPORTANT: 2 news items need reading for repository 'gentoo'.
* Use eselect news to read news items.
சென்டூ ebuild கருவூலத்தின் மூலம் தீவிரமான செய்திகளைப் பயனர்களுக்குத் தெரிவிப்பதற்கான உரையாடல் ஊடகத்தை அளிப்பதற்காகச் செய்தி உருப்படிகள் உருவாக்கப்பட்டன. இதை மேலாண்மை செய்ய eselect news ஐ பயன்படுத்தவும். சென்டூ சார்ந்த பயன்கூறு நிரலான eselect என்னும் செயலி முறைமையை மேலாண்மை செய்வதற்கான பொதுவான மேலாண்மை இடைமுகத்தை அனுமதிக்கிறது. இந்த வழக்கில், eselect இல் news
கூறு சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
news
கூறிற்கு, மூன்று செயல்பாடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன:
list
மூலம் இருக்கும் செய்தி உருப்படிகளின் மேலோட்டத்தைக் காணலாம்.read
மூலம் செய்தி உருப்படிகளைப் படிக்கலாம்.purge
மூலம் செய்தி உருப்படிகளைப் படித்தவுடன் மீண்டும் படிக்க இயலாத வகையில் நீக்கவிடலாம்.
root #
eselect news list
root #
eselect news read
செய்தி படிப்பானைப் பற்றி மேலும் தகவல்கள் அதன் கைமுறை பக்கத்தில் காணலாம்:
root #
man news.eselect
சரியான தனியமைப்பைத் தேர்வு செய்தல்
பணித்தள தனியமைப்புகள் பணித்தள சூழல்களுக்கு மட்டும் என்றில்லை. இவை சின்னஞ்சிறு சாளர மேலாளர்களான i3 அல்லது sway விற்கும் பொருந்தும்.
தனியமைப்பு எந்தவொரு சென்டூ முறைமைக்கும் கட்டுமான தொகுதியாகும். இது USE, CFLAGS மற்றும் பல முக்கியமான மாறிகளுக்கு முன்னிருப்பு மதிப்புகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட தொகுப்பு பதிப்புகளின் வரம்பை முறைமையோடு பூட்டி வைக்கிறது. இந்த அமைப்புகள் எல்லாம் சென்டூ Portage உருவாக்குநர்களால் பராமரிக்கப்படுகிறது.
முறைமை இப்போது எந்த தனியமைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை காண, eselect கட்டளையில் இப்போது profile
என்னும் கூறையும் சேர்த்து இயக்கவும்:
root #
eselect profile list
Available profile symlink targets: [1] default/linux// * [2] default/linux///desktop [3] default/linux///desktop/gnome [4] default/linux///desktop/kde
கட்டளையின் வெளியீடு வெறும் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இது காலத்திற்கு தகுந்தவாறு மாறலாம்.
Systemd ஐ பயன்படுத்துவதற்கு, தனியமைப்பு பெயரில் systemd என்பது சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். OpenRC ஐ பயன்படுத்தினால், தனியமைப்பு பெயரில் systemd என்பது சேர்க்கப்படாமல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இதில் இருப்பதைப் போல், சில கட்டமைப்புகளுக்கான திரைபலக துணை தனியமைப்புக்களும் கிடைக்கின்றன.
தனியமைப்பு திறமுயர்த்தலை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. துவக்கத் தனியமைப்பைத் தேர்வு செய்யும்போது, துவக்கத்தில் நிலை3 ஆல் பயன்படுத்தப்பட்ட பதிப்பிற்குத் தொடர்புடைய அதே பதிப்பை கொண்ட தனியமைப்பு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்து கொள்ளவும். ஒவ்வொரு புதிய தனியமைப்பு பதிப்பும் அதன் குடிபெயர்தல் வழிகாட்டுதல்களைக் கொண்ட செய்தி உருப்படி மூலம் அறிவிக்கப்படுகிறது. புதிய தனியமைப்பிற்கு மாறுவதற்கு முன் மறக்காமல் இதைப் படித்து பின் இதில் உள்ளதைப் பின்பற்றவும்.
கட்டமைப்பிற்கான தனியமைப்புகளைப் பார்வையிட்ட பின், பயனர்கள் முறைமைக்கான வெவ்வேறு தனியமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்:
root #
eselect profile set 2
This is a placeholder for architecture-specific profile information
developer
துணை தனியமைப்பு சென்டூ லினக்சு வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டது. ஆகையால் வழக்கமான பயனர்கள் பயன்படுத்துவதற்குத் தகுந்ததல்ல.Optional: Adding a binary package host
Since December 2023, Gentoo's Release Engineering team has offered an official binary package host (colloquially shorted to just "binhost") for use by the general community to retrieve and install binary packages (binpkgs).[1]
Adding a binary package host allows Portage to install cryptographically signed, compiled packages. In many cases, adding a binary package host will greatly decrease the mean time to package installation and adds much benefit when running Gentoo on older, slower, or low power systems.
Repository configuration
The repository configuration for a binhost is found in Portage's /etc/portage/binrepos.conf/ directory, which functions similarly to the configuration mentioned in the Gentoo ebuild repository section.
When defining a binary host, there are two important aspects to consider:
- The architecture and profile targets within the
sync-uri
value do matter and should align to the respective computer architecture ( in this case) and system profile selected in the Choosing the right profile section. - Selecting a fast, geographically close mirror will generally shorten retrieval time. Review the mirrorselect tool mentioned in the Optional: Selecting mirrors section or review the online list of mirrors where URL values can be discovered.
[binhost]
priority = 9999
sync-uri = https://distfiles.gentoo.org/releases/<arch>/binpackages/<profile>/x86-64/
Installing binary packages
Portage will compile packages from code source by default. It can be instructed to use binary packages in the following ways:
- The
--getbinpkg
option can be passed when invoking the emerge command. This method of for binary package installation is useful to install only a particular binary package. - Changing the system's default via Portage's FEATURES variable, which is exposed through the /etc/portage/make.conf file. Applying this configuration change will cause Portage to query the binary package host for the package(s) to be requested and fall back to compiling locally when no results are found.
For example, to have Portage always install available binary packages:
# Appending getbinpkg to the list of values within the FEATURES variable
FEATURES="${FEATURES} getbinpkg"
# Require signatures
FEATURES="${FEATURES} binpkg-request-signature"
Please also run getuto for Portage to set up the necessary keyring for verification:
root #
getuto
Additional Portage features will be discussed in the the next chapter of the handbook.
USE மாறிகளை உள்ளமைத்தல்
USE மாறி சென்டூ தனது பயனர்களுக்கு அளிக்கும் திறன்மிகு மாறிகளுள் ஒன்றாகும். இதன்மூலம் பல்வேறு நிரல்களை சில உருப்படிகளின் ஆதரவு இருந்தும் இல்லாமலும் தொகுக்கலாம். எடுத்துக்காட்டாக, சில நிரல்கள் GTK+ கான ஆதரவுடனும் அல்லது Qt கான ஆதரவுடனும் தொகுக்கலாம். மற்றவற்றை SSL கான ஆதரவு இருந்தும் இல்லாமலும் தொகுக்கலாம். சில நிரல்களை X11 (X-சேவையகம்) ஆதரவிற்குப் பதிலாகச் சட்ட இடையகத்திற்கான (svgalib) ஆதரவைக் கொண்டும் தொகுக்கலாம்.
பெரும்பாலான வழங்கல்கள் தொகுப்புகளைத் தொகுக்கும்போது வாய்ப்புள்ள எல்லா ஆதரவுகளையும் கொண்டு தொகுப்பதால், நிரலின் அளவும் அதன் துவக்க நேரமும் கணிசமாகக் கூடுகிறது, மேலும் இதற்குத் தேவையான சார்புநிலை தொகுப்புக்களும் மலைபோல் கூவிய துவங்கிவிடுகின்றன. சென்டூவின் மூலம் பயனர்கள் ஒரு தொகுப்பு என்ன விருப்பத்தேர்வுகளுடன் தொகுக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்க முடியும். இந்த இடத்தில் தான் USE இன் பணி துவங்குகிறது.
USE மாறியில் பயனர் வரையறுக்கும் திறவுச்சொல் தொகுப்பு-விருப்பத்தேர்வுகளோடு இணைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ssl
என்பது SSL ஆதரவு தேவைப்படும் நிரல்களைத் தொகுக்கும்போது அதன் ஆதரவோடு சேர்த்துத் தொகுக்கும். -X
ஆனது X-சேவையகத்திற்கான ஆதரவை நீக்கிவிடும் (முன் உள்ள கழித்தல் (-) குறியைக் கவனிக்கவும்). gnome gtk -kde -qt5
எனக் குறிப்பிடும்போது KDE (மற்றும் Qt) கான ஆதரவு இல்லாமல் Gnome (மற்றும் GTK+) க்கான ஆதரவைக் கொண்டு நிரல்களைத் தொகுத்து, முறைமை முழுவதையும் GNOME ற்கானதாக அமைக்கும் (இதைக் கட்டமைப்பு ஆதரித்தால்).
முன்னிருப்பு USE அமைப்புகள் முறைமையால் பயன்படுத்தப்படும் சென்டூ தனியமைப்பின் make.defaults கோப்பில் வைக்கப்பட்டுள்ளன. சென்டூ தனது தனியமைப்புகளுக்கு (சிக்கலான) மரபுரிமை முறைமையைப் பயன்படுத்துகிறது, எனினும் இதை இந்த நிலையில் நாம் காணப்போவதில்லை. இப்போது செயல்பாட்டில் உள்ள USE அமைப்புகளைக் காண்பதற்கான எளிமையான வழி emerge --info ஐ இயக்கி USE எனத் தொடங்கும் வரியைக் காணுதலே ஆகும்.
root #
emerge --info | grep ^USE
USE="X acl alsa amd64 berkdb bindist bzip2 cli cracklib crypt cxx dri ..."
மேலுள்ள எடுத்துக்காட்டு துண்டாக்கிக் காட்டப்பட்டுள்ளது. உண்மையான USE மதிப்புகளின் பட்டியல் இதை விட மிகப் பெரியது.
கிடைக்கும் USE கொடிகளைப் பற்றிய முழு விளக்கமும் முறைமையில் உள்ள /profiles/use.desc என்னும் இருப்பிடத்தில் கண்டறியலாம்.
root #
less /profiles/use.desc
less கட்டளைக்குள், மேலும் கீழும் செல்ல முறையே ↑ மற்றும் ↓ விசையையும், வெளியேற q விசையையும் அழுத்தவும்.
எடுத்துக்காட்டாக, பல்திறன்வட்டு, ALSA மற்றும் குறுந்தகடு பதிவுசெய்தல் ஆதரவுடன் கூடிய KDE/Plasma அடிப்படையிலான முறைமைக்குத் தேவையான USE கொடிகளை அமைப்பதைக் காண்பித்துள்ளோம்:
root #
nano -w /etc/portage/make.conf
USE="-gtk -gnome qt5 kde dvd alsa cdr"
/etc/portage/make.conf கோப்பில் USE கொடி வரையறுக்கப்படும்போது, முறைமையின் USE கொடி பட்டியலில் அது சேர்க்கப்படுகிறது. பட்டியலில் உள்ள மதிப்பின் முன் - குறியைச் சேர்ப்பதன் மூலம் USE கொடியை முறைமை முழுமைக்கும் முடக்கலாம். எடுத்துக்காட்டாக -X
என அமைப்பதன் மூலம் X வரைகலை சூழலுக்கான ஆதரவை முறைமை முழுமைக்கும் முடக்க இயலும்:
USE="-X acl alsa"
வாய்ப்புள்ள போதிலும்,
-*
அமைப்பது கடுமையாக ஊக்கங்கெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் make.conf இல் குறிப்பிட்டுள்ள USE கொடிகளைத் தவிர மற்ற எல்லா USE கொடிகளும் முடக்கப்பட்டுவிடும். பாதுகாப்பை அதிகப்படுத்தவும் சிக்கல்களை மற்றும் பிழைகளைத் தவிர்க்கவும் Ebuild உருவாக்குநர்கள் ebuild களில் குறிப்பிட்ட சில USE கொடிகளை முன்னிருப்பாக அவற்றிற்கு வைத்துள்ளனர். எல்லா USE கொடிகளையும் முடக்கினால் முன்னிருப்பு நடத்தையைப் பாதித்து பெரிய சிக்கல்களை உருவாக்கும்.CPU_FLAGS_*
சில கட்டமைப்புகள் (AMD64/X86, ARM, PPC ஐயும் சேர்த்தது) CPU_FLAGS_ARCH (ARCH க்கு பதில் பொருத்தமான கட்டமைப்பை இட்டு பொருள் கொள்ளவும்) என அழைக்கப்படும் USE_EXPAND மாறியைக் கொண்டிருக்கும்.
Do not be confused! AMD64 and X86 systems share some common architecture, so the proper variable name for AMD64 systems is CPU_FLAGS_X86.
இது குறிப்பிட்ட சில்லு மொழி குறிமுறை அல்லது பிற உள்நிலைகளில் தொகுக்க (பொதுவாக கையால் எழுதப்பட்ட அல்லது கூடுதலானதில்) உருவாக்கலை உள்ளமைக்க பயன்படுகிறது. மேலும் இது ஒரு குறிப்பிட்ட CPU தனிச்சிறப்பிற்காக (எ.கா. -march=
) மேம்படுத்தப்பட்ட குறியீட்டை வெளியிடுமாறு தொகுப்பியிடம் கேட்பது போன்று இல்லை'.
பயனர்கள் COMMON_FLAGS ஐ உள்ளமைப்பதோடு இந்த மாறியையும் அமைக்க வேண்டும்.
இதை அமைப்பதற்கு சில படிநிலைகளை செய்ய வேண்டியுள்ளது:
root #
emerge --ask app-portage/cpuid2cpuflags
ஆர்வமுள்ளவர்கள் இதன் வெளியீட்டை கைமுறையாக ஆய்வு செய்யலாம்:
root #
cpuid2cpuflags
பிறகு package.use ஆக வெளியீட்டை நகலெடுக்கவும்:
root #
echo "*/* $(cpuid2cpuflags)" > /etc/portage/package.use/00cpu-flags
VIDEO_CARDS
கிடைக்கும் GPU களுக்கு தகுந்தவாறு VIDEO_CARDS USE_EXPAND மாறியைப் பொருத்தமாக உள்ளமைக்க வேண்டும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை Xorg வழிகாட்டி விவரிக்கிறது. முனையம் மட்டும் உள்ள நிறுவலுக்கு VIDEO_CARDS மாறியை அமைக்கத் தேவையில்லை.
Below is an example of a properly set VIDEO_CARDS variable. Substitute the name of the driver(s) to be used.
VIDEO_CARDS="amdgpu radeonsi"
Details for various GPU(s) can be found at the AMDGPU, Intel, Nouveau (Open Source), or NVIDIA (Proprietary) articles.
விரும்பினால்: ACCEPT_LICENSE மாறியை உள்ளமைத்தல்
Starting with Gentoo Linux Enhancement Proposal 23 (GLEP 23), a mechanism was created to allow system administrators the ability to "regulate the software they install with regards to licenses... Some want a system free of any software that is not OSI-approved; others are simply curious as to what licenses they are implicitly accepting."[2] With a motivation to have more granular control over the type of software running on a Gentoo system, the ACCEPT_LICENSE variable was born.
சென்டூ, தனியமைப்பில் முன் வரையறுக்கப்பட்ட மதிப்போடு வருகிறது. எடுத்துக்காட்டாக:
user $
portageq envvar ACCEPT_LICENSE
@FREE
சென்டூ கருவூலத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிம குழுக்கள் சென்டூ உரிம செயற்றிட்டத்தால் மேலாண்மை செய்யப்படுகிறது. இவை:
குழு பெயர் | விளக்கம் |
---|---|
@GPL-COMPATIBLE | கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட GPL இசைவுடை மென்பொருள் [உரிமம் 1] |
@FSF-APPROVED | கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் (@GPL-COMPATIBLE ஐ சேர்த்து) |
@OSI-APPROVED | திறந்த மூல முன்னெடுப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமங்கள் [உரிமம் 2] |
@MISC-FREE | வகையுறா உரிமங்கள் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் அதாவது கட்டற்ற மென்பொருள் வரையறுத்தலைப் பின்பற்றக்கூடியதாக இருக்கும் [உரிமம் 3] ஆனால் FSF மற்றும் OSI ஆகிய இவ்விரண்டாலும் ஏற்றுக் கொள்ளப்படாதவை |
@FREE-SOFTWARE | @FSF-APPROVED, @OSI-APPROVED மற்றும் @MISC-FREE ஆகிய மூன்றின் கூட்டு |
@FSF-APPROVED-OTHER | "திறந்த ஆவணப்படுத்தல்" மற்றும் "மென்பொருள் மற்றும் ஆவணங்கள் தவிர நடைமுறை பயன்பாட்டின் பணிகள்" (எழுத்துருக்களோடு சேர்த்து) ஆகியவற்றிற்கான FSF ஆல் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமங்கள் |
@MISC-FREE-DOCS | கட்டற்ற வரையறுத்தலைப் பின்பற்றும் கட்டற்ற ஆவணங்கள் மற்றும் இதர பணிகளுக்கான (எழுத்துருக்களோடு சேர்த்து) வகையுறா உரிமங்கள் [உரிமம் 4] ஆனால் இவை @FSF-APPROVED-OTHER இல் பட்டியலிடப்படவில்லை |
@FREE-DOCUMENTS | @FSF-APPROVED-OTHER மற்றும் @MISC-FREE-DOCS ஆகிய இரண்டின் கூட்டு |
@FREE | பயன்படுத்த, பகிர, திருத்த மற்றும் திருத்தியதைப் பகிர விடுதலையை அளிக்கும் எல்லா உரிமங்களின் மீதொகுப்பாகும். @FREE-SOFTWARE மற்றும் @FREE-DOCUMENTS ஆகிய இரண்டின் கூட்டு |
@BINARY-REDISTRIBUTABLE | குறைந்தது இரும வடிவிலான மென்பொருளின் கட்டற்ற மறுவழங்கலையாவது ஏற்றுக் கொள்ளும் உரிமங்கள். @FREE ஐ சேர்த்து |
@EULA | இவ்வகை உரிம உடன்படிக்கைகள் உங்கள் உரிமையை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யும். "அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை" அல்லது வெளிப்படையான ஏற்றுக்கொள்ளுதல் தேவைப்படும் உரிமங்களை விட இது கட்டுப்பாடுகள் நிறைந்தது |
Some common license groups include:
Name | Description |
---|---|
@GPL-COMPATIBLE |
GPL compatible licenses approved by the Free Software Foundation [a_license 1] |
@FSF-APPROVED |
Free software licenses approved by the FSF (includes @GPL-COMPATIBLE )
|
@OSI-APPROVED |
Licenses approved by the Open Source Initiative [a_license 2] |
@MISC-FREE |
Misc licenses that are probably free software, i.e. follow the Free Software Definition [a_license 3] but are not approved by either FSF or OSI |
@FREE-SOFTWARE |
Combines @FSF-APPROVED , @OSI-APPROVED , and @MISC-FREE .
|
@FSF-APPROVED-OTHER |
FSF-approved licenses for "free documentation" and "works of practical use besides software and documentation" (including fonts) |
@MISC-FREE-DOCS |
Misc licenses for free documents and other works (including fonts) that follow the free definition [a_license 4] but are NOT listed in @FSF-APPROVED-OTHER .
|
@FREE-DOCUMENTS |
Combines @FSF-APPROVED-OTHER and @MISC-FREE-DOCS .
|
@FREE |
Metaset of all licenses with the freedom to use, share, modify and share modifications. Combines @FREE-SOFTWARE and @FREE-DOCUMENTS .
|
@BINARY-REDISTRIBUTABLE |
Licenses that at least permit free redistribution of the software in binary form. Includes @FREE .
|
@EULA |
License agreements that try to take away your rights. These are more restrictive than "all-rights-reserved" or require explicit approval |
Currently set system wide acceptable license values can be viewed via:
user $
portageq envvar ACCEPT_LICENSE
@FREE
As visible in the output, the default value is to only allow software which has been grouped into the @FREE
category to be installed.
Specific licenses or licenses groups for a system can be defined in the following locations:
- தேர்ந்தெடுத்த தனியமைப்பில் முறைமை முழுமைக்கும்.
- /etc/portage/make.conf கோப்பில் முறைமை முழுமைக்கும்.
- /etc/portage/package.license கோப்பில் ஒவ்வொரு தொகுப்பிற்கும் தனித்தனியாக.
- /etc/portage/package.license/ கோப்புகளுக்கான அடைவில் ஒவ்வொரு தொகுப்புகளுக்கும் தனித்தனியாக.
தேவைப்பட்டால் /etc/portage/make.conf கோப்பில் மாற்றங்கள் செய்வது மூலம் தனியமைப்பில் உள்ள முறைமை முழுமைக்குமானதாக ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னிருப்பை மேலெழுதவும். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, திறந்த மூல முன்னெடுப்பு அல்லது திறந்த மென்பொருள் வரையறுத்தலைப் பின்பற்றும் உரிமங்களை மட்டுமே முன்னிருப்பு மதிப்பு அனுமதிக்கும்:
ACCEPT_LICENSE="-* @FREE"
தேவைப்பட்டால் கீழுள்ள எடுத்துக்காட்டில் காட்டப்பட்டுள்ளது போல ஒவ்வொரு தொகுப்புகளுக்கும் தனித்தனியாக ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமங்களை வரையறுக்கலாம். package.license அடைவு ஏற்கனவே இல்லையென்றால் இப்போது உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
root #
mkdir /etc/portage/package.license
Software license details for an individual Gentoo package are stored within the LICENSE variable of the associated ebuild. One package may have one or many software licenses, therefore it be necessary to specify multiple acceptable licenses for a single package.
app-arch/unrar unRAR
sys-kernel/linux-firmware @BINARY-REDISTRIBUTABLE
sys-firmware/intel-microcode intel-ucode
ebuild இல் உள்ள LICENSE மாறியானது சென்டூ உருவாக்குநர்கள் மற்றும் பயனர்களுக்கான வழிகாட்டி மட்டுமே, சட்ட வாக்குமூலம் இல்லை. மேலும் இது நடைமுறையில் எதிரொலிக்கும் என எந்த பொறுப்புறுதியும் இல்லை. அதனால் இதை நம்பி இருக்க வேண்டாம். முறைமையில் நிறுவப்பட்டுள்ள எல்லா கோப்புகளையும் சேர்த்துத் தொகுப்பை ஆழமாகச் சரிபார்க்கவும்.
@world தொகுப்பை புதுப்பித்தல்
பின்வரும் படிநிலையானது நிலை3 உருவாக்கலிலிருந்தும் தனியமைப்பைத் தேர்வு செய்தலுக்கு பிறகும் ஏற்பட்ட USE கொடி மாற்றங்கள் மற்றும் ஏதாவது புதுப்பித்தல்களை முறைமையில் இடுவதற்கான கட்டாய தேவையாகும்:
- A profile target different from the stage file has been selected.
- Additional USE flags have been set for installed packages.
Readers who are performing an 'install Gentoo speed run' may safely skip @world set updates until after their system has rebooted into the new Gentoo environment.
Readers who are performing a slow run can have Portage perform updates for package, profile, and/or USE flag changes at the present time:
root #
emerge --ask --verbose --update --deep --newuse @world
Removing obsolete packages
It is important to always depclean after system upgrades to remove obsolete packages. Review the output carefully with emerge --depclean --pretend to see if any of the to-be-cleaned packages should be kept if personally using them. To keep a package which would otherwise be depcleaned, use emerge --noreplace foo.
root #
emerge --ask --pretend --depclean
If happy, then proceed with a real depclean:
root #
emerge --ask --depclean
முழு அளவிலான திரைப்புலச் சூழல் தனியமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த செயல்பாடு நிறுவல் செயல்பாட்டின் நேர அளவை கணிசமாக அதிகரிக்கும். நேர நெருக்கடியில் உள்ளவர்கள் இந்த 'குத்துமதிப்பு விதியை' பயன்படுத்தலாம்: எவ்வளவு குறைவாகத் தனியமைப்பு பெயர் உள்ளதோ, அவ்வளவு குறைவாக முறைமையின் @world தொகுதி அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்; எவ்வளவு குறைவாக @world தொகுதி அளவு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவ்வளவு குறைவான தொகுப்புகள் தான் முறைமைக்குத் தேவைப்படும். இதை இன்னொரு விதமாகக் கூற வேண்டும் என்றால்:
default/linux/amd64/
என்னும் தனியமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது குறைந்த அளவிலான தொகுப்புகள் மட்டுமே நிறுவலுக்குத் தேவைப்படும். ஆனால்default/linux/amd64//desktop/gnome/systemd
என்னும் தனியமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது init முறைமையை OpenRC இல் இருந்து Systemd ற்கு மாற்றுவதாலும், GNOME திரைப்புலச் சூழல் சட்டகம் நிறுவப்படவிருப்பதாலும் நிறையத் தொகுப்புகள் நிறுவலுக்குத் தேவைப்படும்.
நேரவலயம்
musl சி நிரலகத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த படிநிலை பொருந்தாது. இது என்னவென்றே தெரியாத பயனர்கள் இந்த படிநிலையைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
/usr/share/zoneinfo/Etc/GMT* நேரவலயங்களை தவிர்க்கவும். இதன் பெயர்களை அறிந்த வலையங்களில் எதையும் சுட்டிக்காட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, GMT-8 உண்மையில் GMT+8 ஆகும்.
முறைமைக்கான நேரவலயத்தை தேர்ந்தெடுக்கவும். இதற்கு /usr/share/zoneinfo/ என்னும் கோப்பில் கிடைக்கும் நேரவலயங்களை பார்க்கவும்:
root #
ls /usr/share/zoneinfo
root #
ls -l /usr/share/zoneinfo/Europe/
total 256 -rw-r--r-- 1 root root 2933 Dec 3 17:19 Amsterdam -rw-r--r-- 1 root root 1742 Dec 3 17:19 Andorra -rw-r--r-- 1 root root 1151 Dec 3 17:19 Astrakhan -rw-r--r-- 1 root root 2262 Dec 3 17:19 Athens -rw-r--r-- 1 root root 3664 Dec 3 17:19 Belfast -rw-r--r-- 1 root root 1920 Dec 3 17:19 Belgrade -rw-r--r-- 1 root root 2298 Dec 3 17:19 Berlin -rw-r--r-- 1 root root 2301 Dec 3 17:19 Bratislava -rw-r--r-- 1 root root 2933 Dec 3 17:19 Brussels ...
ஒருவேளை உங்கள் நேரவலய தேர்வு Europe/Brussels ஆக இருந்தால்.
OpenRC
நாம் நேரவலய பெயரை /etc/timezone கோப்பினுள் இவ்வாறாக எழுதுவோம்.
root #
echo "Europe/Brussels" > /etc/timezone
அடுத்து, sys-libs/timezone-data தொகுப்பை மறு உள்ளமைவு செய்யவும். இது /etc/timezone பதிவை அடிப்படையாகக் கொண்டு /etc/localtime கோப்பை நமக்காகப் புதுப்பிக்கும். முறைமை எங்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள /etc/localtime கோப்பை முறைமை C தரவகம் பயன்படுத்துகிறது.
root #
emerge --config sys-libs/timezone-data
The /etc/localtime file is used by the system C library to know the timezone the system is in.
systemd
இங்குச் சற்று மாறுபட்ட வழி கையாளப்பட்டுள்ளது; குறியீட்டுத் தொடுப்பானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது:
root #
ln -sf ../usr/share/zoneinfo/Europe/Brussels /etc/localtime
பின்பு, systemd இயங்கிக்கொண்டிருக்கும் போது, timedatectl கட்டளையைக் கொண்டு நேரவலயம் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளை உள்ளமைக்கலாம்.
நிகழ்வு இயலிடங்களை உள்ளமைத்தல்
musl சி நிரலகத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த படிநிலை பொருந்தாது. இது என்னவென்றே தெரியாத பயனர்கள் இந்த படிநிலையைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
நிகழ்வு இயலிடத்தை உற்பத்தி செய்தல்
பெரும்பாலான பயனர்கள் தங்கள் முறைமையில் ஒன்று அல்லது இரண்டு நிகழ்வு இயலிடங்களை பயன்படுத்துவர்.
நிகழ்வு இயலிடங்கள் முறைமையோடு பயனர் உரையாடப் பயன்படுத்தும் மொழியை மட்டுமில்லாமல் சரங்களை வரிசைப்படுத்தல், நாள் மற்றும் நேரங்களைக் காட்டுதல் முதலியவற்றிற்கான விதிகளையும் குறிப்பிடுகிறது. நிகழ்வு இயலிடங்கள் எழுத்துயர்நிலை உணர்வுடையது என்பதால் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளதோ அதைப் போலவே குறிப்பிட வேண்டும். கிடைக்கும் நிகழ்வு இயலிடங்களின் முழு பட்டியலை /usr/share/i18n/SUPPORTED என்னும் கோப்பில் கண்டறியலாம்.
ஆதரிக்கப்பட்ட முறைமை நிகழ்வு இயலிடங்கள் /etc/locale.gen கோப்பில் வரையறுக்கப்பட வேண்டும்.
root #
nano -w /etc/locale.gen
பின்வரும் நிகழ்வு இயலிடங்கள் ஆங்கிலம் (அமெரிக்க ஐக்கிய நாடு) மற்றும் ஜெர்மன் (ஜெர்மனி/இடாய்ச்சு நாடு) ஆகியவற்றை அதன் எழுத்துருக்களுடன் (UTF-8 போன்ற) சேர்த்து பெறுவதற்கான எடுத்துக்காட்டாகும்.
en_US ISO-8859-1
en_US.UTF-8 UTF-8
de_DE ISO-8859-1
de_DE.UTF-8 UTF-8
பல செயலிகள் முறையாக உருவாக்குவதற்குத் குறைந்தது ஒரு UTF-8 நிகழ்வு இயலிடமாவது தேவைப்படும்.
அடுத்ததாக locale-gen கட்டளையை இயக்கவும். இது /etc/locale.gen கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நிகழ்வு இயலிடங்களையும் உற்பத்தி செய்யும்.
root #
locale-gen
தேர்ந்தெடுத்த நிகழ்வு இயலிடங்கள் இருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதற்கு, locale -a கட்டளையை இயக்கவும்.
systemd நிறுவல்களில் localectl ஐ பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக localectl set-locale ... அல்லது localectl list-locales.
நிகழ்வு இயலிடத்தை தேர்வு செய்தல்
இது முடிந்தவுடன், இப்போது locale
கூறை பயன்படுத்தி முறைமை முழுமைக்குமான நிகழ்வு இயலிட அமைப்புகளை அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
eselect locale list ஐ கொண்டு, கிடைக்கும் இலக்குகளை காணலாம்:
root #
eselect locale list
Available targets for the LANG variable: [1] C [2] C.utf8 [3] en_US [4] en_US.iso88591 [5] en_US.utf8 [6] de_DE [7] de_DE.iso88591 [8] de_DE.iso885915 [9] de_DE.utf8 [10] POSIX [ ] (free form)
eselect locale set <எண்> ஐ கொண்டு, சரியான நிகழ்வு இயலிடத்தை தேர்வு செய்யலாம்:
root #
eselect locale set 9
கைமுறையாக, /etc/env.d/02locale கோப்பு மற்றும் Systemd கான /etc/locale.conf கோப்பை கொண்டும் இதைச் செய்து முடிக்கலாம்:
LANG="de_DE.UTF-8"
LC_COLLATE="C.UTF-8"
நிகழ்வு இயலிடத்தை அமைப்பதனால் நிறுவலில் வரவிருக்கும் கர்னல் மற்றும் மென்பொருள் தொகுத்தலின்போது வரும் எச்சரிக்கைகள் மற்றும் பிழைகள் தவிர்க்கப்படும்.
இப்போது சூழலை மறு ஏற்றவும்:
root #
env-update && source /etc/profile && export PS1="(chroot) ${PS1}"
நிகழ்வு இயலிடத்தை தேர்வு செய்யும் செயலுக்கு கூடுதல் வழிகாட்டுதல் தேவைப்பட்டால் நிகழ்வு இயலிட வழிகாட்டி மற்றும் UTF-8 வழிகாட்டியை படிக்கவும்.
References
Cite error: <ref>
tags exist for a group named "a_license", but no corresponding <references group="a_license"/>
tag was found