Translations:Handbook:AMD64/Installation/System/2/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
Handbook:AMD64 கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை


கோப்பு முறைமை தகவல்

கோப்புமுறைமை முத்திரைகள் மற்றும் UUID க்கள்

MBR (BIOS) மற்றும் GPT ஆகிய இரண்டும் கோப்பு முறைமை முத்திரைகள் மற்றும் கோப்பு முறைமை UUID களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளன. தொகுப்பு சாதனங்களை mount கட்டளை மூலம் தேடி ஏற்றுவதற்கு மாற்றாக இந்த பண்புகளை /etc/fstab என்னும் கோப்பில் வரையறுக்கலாம். கோப்பு முறைமையின் முத்திரைகள் மற்றும் UUID கள் முறையே LABEL மற்றும் UUID என்னும் முன்னொட்டு மூலம் அடையாளங்காட்டப்படுகிறது. இதை blkid கட்டளையைக் கொண்டு காணலாம்.

root #blkid
Warning
பகிர்வில் உள்ள கோப்பு முறைமை துடைத்தெறியப்பட்டால், அதற்குத் தொடர்புடைய கோப்பு முறைமை முத்திரைகள் மற்றும் UUID மதிப்புகளும் மாற்றப்பட்டிருக்கும் அல்லது நீக்கப்பட்டிருக்கும்.

தனித்துவம் காரணமாக, MBR-பாணியில் உள்ள பகிர்வு அட்டவணையைப் பயன்படுத்தும் படிப்பவர்கள், /etc/fstab கோப்பில் ஏற்றக்கூடிய கனவளவுகளை வரையறுக்கும்போது முத்திரைகளுக்குப் பதிலாக UUID க்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

Important
LVM தொகுதியில் உள்ள கோப்பு முறைமையின் UUID மற்றும் அதன் LVM நிழற்பட நொடிப்பெடுப்பு ஒரே மாதிரியாக இருக்கும், எனவே LVM தொகுதிகளை ஏற்ற UUID ஐ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பகிர்வு முத்திரைகள் மற்றும் UUID க்கள்

GPT வழியைத் தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு /etc/fstab கோப்பில் பகிர்வை வரையறுக்க இன்னும் கூடுதல் 'திடமான' விருப்பத்தேர்வுகள் உள்ளன. பகிர்வுகளுக்கு என்ன கோப்பு முறைமை தேர்வு செய்யப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாமல், பகிர்வு முத்திரை மற்றும் பகிர்வு UUID பயன்படுத்தி தொகுதி சாதனங்களில் உள்ள தனி பகிர்வுகளை அடையாளம் காணலாம். பகிர்வின் முத்திரைகள் மற்றும் UUID கள் முறையே PARTLABEL மற்றும் PARTUUID என்னும் முன்னொட்டு மூலம் அடையாளங்காட்டப்படுகிறது. இதை blkid கட்டளையைக் கொண்டு காணலாம்.

Output for an amd64 EFI system using the Discoverable Partition Specification UUIDs may like the following:

root #blkid

பகிர்வு முத்திரைகளுக்கு எல்லா நேரத்திலும் இந்த கருத்து உண்மையாக இருப்பதில்லை என்றாலும், fstab இல் உள்ள பகிர்வுகளை அடையாளம் காண UUID ஐ பயன்படுத்தும்போது எதிர்காலத்தில் கோப்பு முறைமை மாற்றப்பட்டாலும், குறிப்பிட்ட கனவளவை தேடும்போது துவக்க ஏற்றிக் குழப்பமடையாது என்னும் பொறுப்புறுதியை அளிக்கிறது. அடிக்கடி மறுதொடக்கம் செய்யப்படும் முறைமைகள், வழக்கமாகச் சேர்க்க மற்றும் நீக்கப்படும் SATA தொகுதி சாதனங்கள் ஆகியவற்றில், fstab கோப்பில் பகிர்வுகளை வரையறுக்கப் பழைய முன்னிருப்பு தொகுதி சாதன கோப்புகள் (/dev/sd*N) ஐ பயன்படுத்துவது இடர்மிகு செயலாகும்.

தொகுப்பு சாதன கோப்புகளைப் பெயரிடல் ஆனது எவ்வாறு மற்றும் எந்த வரிசையில் வட்டுக்கள் முறைமையோடு இணைக்க வேண்டும் போன்ற பல காரணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது. முன் துவக்கச் செயலின்போது எந்த சாதனம் முதலில் கர்னலால் கண்டறியப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து இது வெவ்வேறு வரிசைகளிலும் காட்டலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, வட்டு வரிசைகளோடு தொடர்ந்து விளையாட விரும்பாதவர்களுக்கு, முன்னிருப்பு தொகுப்பு சாதன கோப்புகள் ஒரு எளிமையான மற்றும் நேர்மையான வழியாகும்.

fstab ஐ பற்றி

லினக்ஸின் கீழ், முறைமையால் பயன்படுத்தப்படும் எல்லா பகிர்வுகளும் /etc/fstab என்னும் கோப்பில் பட்டியலிட வேண்டும். இந்த கோப்பானது பகிர்வுகளுக்கான ஏற்றப்புள்ளி (கோப்பு முறைமை கட்டுமானத்தில் இதைக் காணலாம்), எவ்வாறு இவை ஏற்றப்பட வேண்டும் மற்றும் எவ்வகையான சிறப்பு விருப்பத்தேர்வுகளைக் கொண்டு ஏற்றப்பட வேண்டும் (தானியக்கமாகவா, அல்லது கைமுறையாகவா, பயனர்கள் பகிர்வுகளை ஏற்றலாமா வேண்டாமா முதலியவை) என்பதைக் கொண்டுள்ளது.

fstab கோப்பை உருவாக்கல்

Note
If the init system being used is systemd, the partition UUIDs conform to the Discoverable Partition Specification as given in Preparing the disks, and the system uses UEFI, then creating an fstab can be skipped, since systemd auto-mounts partitions that follow the spec.

/etc/fstab கோப்பு அட்டவணை போல் உள்ள தொடரியலைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு வரியும் வெள்ளை இடைவெளியால் பிரிக்கப்பட்ட ஆறு புலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு புலமும் அதன் சுய பொருளைக் கொண்டுள்ளது:

  1. முதல் புலம் ஏற்றப்பட வேண்டிய சிறப்புத் தொகுதி சாதனம் அல்லது தொலைநிலை கோப்பு முறைமையைக் காண்பிக்கிறது. சாதன கோப்பிற்கான பாதை, கோப்பு முறைமை முத்திரைகள் மற்றும் UUID க்கள், பகிர்வு முத்திரைகள் மற்றும் UUID க்கள் முதலிய சிறப்புத் தொகுதி சாதன கணுக்களுக்கான பலவகையான சாதன அடையாளங்காட்டிகள் கிடைக்கின்றன.
  2. இரண்டாம் புலம் பகிர்வு ஏற்றப்பட வேண்டிய ஏற்றுப்புள்ளியைக் காண்பிக்கிறது.
  3. மூன்றாவது புலம் பகிர்வால் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமையின் வகையை காண்பிக்கிறது.
  4. நான்காவது புலம் mount கட்டளை பகிர்வை ஏற்ற விரும்பும்போது பயன்படுத்தும் ஏற்ற விருப்பத்தேர்வுகளைக் காண்பிக்கிறது. ஒவ்வொரு கோப்பு முறைமையும் அதன் சுய ஏற்ற விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துவதால், முழு பட்டியலுக்கு mount இன் கைமுறை பக்கத்தை (man mount) காண முறைமை மேலாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பல ஏற்ற விருப்பத்தேர்வுகளைக் காற்புள்ளியால் பிரித்து அளிக்கலாம்.
  5. ஐந்தாவது புலம் பகிர்வைக் கொட்டிவைக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கக் கொட்டிடம் பயன்படுத்துகிறது. இது பொதுவாக 0 (சுழியம்) என விடப்படும்.
  6. ஆறாவது புலம் முறைமை முறையாக இடைநிறுத்தப்படாத சூழலில் எந்த வரிசையில் கோப்பு முறைமைகள் சரிபார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க fsck பயன்படுத்துகிறது. வேர் கோப்பு முறைமை 1 எனவும் மற்றவை 2 எனவும் இருக்கும் (முறைமை சரிபார்க்கத் தேவையில்லை என்றால் 0 எனக் குறிப்பிடலாம்)
Important
ஜென்டூவின் நிலை கோப்புகளில் அளிக்கப்பட்டுள்ள முன்னிருப்பு /etc/fstab கோப்பு ஏற்கத்தக்க fstab கோப்பு இல்லையென்றாலும் ஒருவகை வார்ப்புருவாகக் கருதி தேவையான மதிப்புகளை உள்ளிட பயன்படுத்திக்கொள்ளலாம்.
root #nano /etc/fstab

DOS/Legacy BIOS systems


முன்னர் முடிவெடுக்கப்பட்ட பகிர்வு திட்டங்கள், CD-ROM இயக்ககங்கள் போன்ற சாதனங்கள், இதர பகிர்வுகள் அல்லது இயக்ககங்கள் (பயன்படுத்தப்பட்டிருந்தால்) ஆகியவற்றிற்குப் பொருந்தும் விதிகளைச் சேர்க்கவும்.

கீழே /etc/fstab கோப்பிற்கான இன்னும் விரிவாக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் காணலாம்:

FILE /etc/fstabமுழு /etc/fstab எடுத்துக்காட்டு
# தகடுகளை ஆயத்தப்படுத்தல் படியிலிருந்து உருவாக்கப்பட்ட ஏதேனும் வடிவமைப்பு வேறுபாடு மற்றும் கூடுதல் பகிர்வுகளைச் சரிசெய்யவும்

   none         swap    sw                   0 0
   /            ext4    noatime              0 1
  
/dev/cdrom  /mnt/cdrom   auto    noauto,user          0 0

/dev/cdrom /mnt/cdrom auto noauto,user 0 0 }}

UEFI systems

Below is an example of an /etc/fstab file for a system that will boot via UEFI firmware:

FILE /etc/fstabA full /etc/fstab example for an UEFI system
# Adjust for any formatting differences and/or additional partitions created from the "Preparing the disks" step
                    0 2
   none             sw                   0 0
   /                defaults,noatime              0 1
</div>

<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
/dev/cdrom  /mnt/cdrom   auto    noauto,user          0 0
Note
Placeholder for architecture-specific fstab examples.

மூன்றாவது புலத்தில் auto எனப் பயன்படுத்தப்பட்டிருக்கும்போது, கோப்பு முறைமையை என்னவாக இருக்கும் என்பதை mount கணிக்குமாறு செய்கிறது. பல கோப்பு முறைமைகளுள் ஒன்றைக் கொண்டு அகற்றுத்தகு ஊடகம் உருவாக்கப்படுவதால் இது பரிந்துரைக்கப்படுகிறது. நான்காவது புலத்தில் உள்ள user விருப்பத்தேர்வு வேர்-அல்லாத பயனர்களும் குறுந்தகட்டை ஏற்றுவதை இயலக்கூடியதாகச் செய்கிறது.

To improve performance, most users would want to add the noatime mount option, which results in a faster system since access times are not registered (those are not needed generally anyway). This is also recommended for systems with solid state drives (SSDs). Users may wish to consider lazytime instead.

Tip
Due to degradation in performance, defining the discard mount option in /etc/fstab is not recommended. It is generally better to schedule block discards on a periodic basis using a job scheduler such as cron or a timer (systemd). See Periodic fstrim jobs for more information.

/etc/fstab கோப்பை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்தவுடன், சேமித்து விட்டு வெளியேறவும்.

வலையமைப்பு தகவல்கள்

It is important to note the following sections are provided to help the reader quickly setup their system to partake in a local area network.

For systems running OpenRC, a more detailed reference for network setup is available in the advanced network configuration section, which is covered near the end of the handbook. Systems with more specific network needs may need to skip ahead, then return here to continue with the rest of the installation.

For more specific systemd network setup, please review see the networking portion of the systemd article.

புரவலன் மற்றும் கள தகவல்கள்

முறைமை மேலாளர் எடுக்கும் முடிவுகளுள் ஒன்று தங்கள் கணினிக்கு ஒரு நல்ல பெயரை இடுதலாகும். இது பார்க்க எளிமையானதாகத் தோன்றினாலும் பெரும்பாலான பயனர்கள் புரவலன்பெயருக்கு ஒரு பொருத்தமான பெயரை இடுவதில் சிரமப்படுகின்றனர். இது இறுதி முடிவு இல்லை, பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும். கீழுள்ள எடுத்துக்காட்டில், tux என்னும் புரவலன் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

OpenRC அல்லது systemd இல் புரவலன்பெயரை அமைத்தல்

root #echo tux > /etc/hostname

systemd

systemd ஐ கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் முறைமையில் முறைமை புரவலன்பெயரை அமைப்பதற்கு hostnamectl பயன்கூறு நிரலை பயன்படுத்தலாம்.

புரவலன்பெயரை "tux" என அமைப்பதற்கு கீழுள்ளவாறு இயக்கவும்:

root #hostnamectl hostname tux

உதவிக்குறிப்புகளை பார்ப்பதற்கு hostnamectl --help அல்லது man 1 hostnamectl என்னும் கட்டளையை இயக்கவும்

வலையமைப்பு

வலையமைப்பு இடைமுகத்தை உள்ளமைப்பதற்கு பல விருப்பத்தேர்வுகள் கிடைக்கின்றன. இந்த பிரிவு அவற்றுள் சிலவற்றை மட்டுமே விவரிக்கிறது. இவற்றில் உங்கள் தேவைக்கு பொருந்தும் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

dhcpcd மூலம் DHCP (init முறைமை எதுவாயினும்)

பெரும்பாலான LAN வலையமைப்புகள் DHCP சேவையகத்தை செயல்படுத்துகிறது. இந்த சூழலில் IP முகவரியை பெறுவதற்கு dhcpcd நிரலை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

dhcpcd ஐ நிறுவுவதற்கு:

root #emerge --ask net-misc/dhcpcd

OpenRC முறைமைகளில் செயல்பட வைத்து பின் சேவையை துவக்குவதற்கு:

root #rc-update add dhcpcd default
root #rc-service dhcpcd start

systemd முறைமைகளில் செயல்பட வைத்து பின் சேவையை துவக்குவதற்கு:

root #systemctl enable --now dhcpcd

With these steps completed, next time the system boots, dhcpcd should obtain an IP address from the DHCP server. See the Dhcpcd article for more details.

netifrc (OpenRC)

Tip
This is one particular way of setting up the network using Netifrc on OpenRC. Other methods exist for simpler setups like Dhcpcd.

வலையமைப்பை உள்ளமைத்தல்

சென்டூ நிறுவலின்போது, ஏற்கனவே வலையமைப்பு உள்ளமைக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அது நேரலை நிறுவல் குறுந்தகட்டிற்கானதே தவிர நிறுவப்பட்ட சூழலுக்கானதில்லை. இப்போது, நிறுவப்பட்ட சென்டூ லினக்சு முறைமைக்காக வலையமைப்பு உள்ளமைக்கப்படுகிறது.

Note
பிணைத்தல், பாலமிடுதல், 802.1Q VLAN கள், கம்பியில்லா வலையமைத்தல் போன்ற மேம்பட்ட தலைப்புகளை உள்ளடக்கிய வலையமைப்பை பற்றிய மேலும் விரிவான தகவல்களை மேம்பட்ட வலையமைப்பு உள்ளமைவு பிரிவில் காணலாம்.

எல்லா வலையமைத்தல் தகவல்களும் /etc/conf.d/net கோப்பில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இது நேர்மையான ஆனால் இயல்புணர்வு இல்லாத தொடரியலைப் பயன்படுத்துகிறது. கவலைப்பட வேண்டாம், எல்லாம் கீழே விளக்கப்பட்டுள்ளது. பல வகையான உள்ளமைவுகளை கொண்ட முழு கருத்திடப்பட்ட எடுத்துக்காட்டு /usr/share/doc/netifrc-*/net.example.bz2 கோப்பில் கிடைக்கும்.

முதலில் net-misc/netifrc தொகுப்பை நிறுவவும்:

root #emerge --ask --noreplace net-misc/netifrc

DHCP இயல்பாக பயன்படுத்தப்படுகிறது. இந்த DHCP வேளை செய்ய DHCP பயனர் நிறுவப்பட வேண்டும். தேவையான முறைமை கருவிகளை நிறுவுதல் என்னும் பிரிவில் இது பின்னர் விவரிக்கப்படும்.

குறிப்பிட்ட DHCP விருப்பத்தேர்வுகளினால் அல்லது DHCP ஐ முழுவதுமாக பயன்படுத்தாத காரணத்தால் வலையமைப்பு உள்ளமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், /etc/conf.d/net ஐ திறந்து:

root #nano /etc/conf.d/net

IP முகவரி தகவல்கள் மற்றும் வழியிடல் தகவல்களை முறையே config_eth0 மற்றும் routes_eth0 களில் அமைக்கவும்:

Note
இது வலையமைப்பு இடைமுகம் eth0 ஆக இருக்கும் எனக் கருதுகிறது. இருப்பினும் இது பெருமளவில் முறைமை சார்ந்தது. அண்மைக் காலத்து நிறுவல் ஊடகமாக இருப்பின், இடைமுகத்தின் பெயர் நிறுவல் குறுந்தகடு துவங்கும்போது இருந்த இடைமுக பெயராகத் தான் இருக்கும் எனக் கருதுவது பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் பற்றிய மேலும் தகவல்கள் வலையமைப்பு இடைமுக பெயரிடல் இல் காணலாம்.
FILE /etc/conf.d/netநிலையான IP வரையறுத்தல்
config_eth0="192.168.0.2 netmask 255.255.255.0 brd 192.168.0.255"
routes_eth0="default via 192.168.0.1"

DHCP ஐ பயன்படுத்த, config_eth0 என்பதை வரையறுக்கவும்:

FILE /etc/conf.d/netDHCP வரையறுத்தல்
config_eth0="dhcp"

எல்லா இருக்கக்கூடிய கூடுதல் உள்ளமைவு விருப்பத்தேர்வுகளின் பட்டியலுக்கு /usr/share/doc/netifrc-*/net.example.bz2 ஐ படிக்கவும். குறிப்பிட்ட DHCP விருப்பத்தேர்வுகள் அமைக்க வேண்டும் என்றால் தவறாமல் DHCP கைமுறை பக்கத்தைப் படிக்கவும்.

முறைமை பல வலையமைப்பு இடைமுகங்களைக் கொண்டிருந்தால், மேலுள்ள படிகளை மீண்டும் config_eth1, config_eth2 முதலியவற்றிற்கும் செய்யவும்.

இப்போது, உள்ளமையைச் சேமித்துத் தொடர்வதற்கு வெளியேறவும்.

வலையமைப்பைத் துவக்கத்தில் தானியக்கமாகத் தொடங்குதல்

வலையமைப்பு இடைமுகங்களைத் துவக்கத்தில் செயல்படுத்த, அவற்றை முன்னிருப்பு ஓடுநிலையில் சேர்க்க வேண்டும்.

root #cd /etc/init.d
root #ln -s net.lo net.eth0
root #rc-update add net.eth0 default

முறைமைக்குப் பல வலையமைப்பு இடைமுகங்கள் இருப்பின், net.eth0 ற்கு நாம் செய்தது போலப் பொருத்தமான net.* கோப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

முறைமை துவக்கப்பட்ட பிறகு வலையமைப்பு இடைமுகத்தின் பெயர் (இப்போது eth0 எனக் குறிக்கப்பட்டுள்ளது) தவறானதாக இருப்பது கண்டறியப்பட்டால், பின்வரும் கட்டளையைச் செயல்படுத்தவும்:

  1. /etc/conf.d/net கோப்பில் சரியான இடைமுக பெயரைக் கொண்டு புதுப்பிக்கவும் (eth0 என்பதற்குப் பதிலாக enp3s0 அல்லது enp5s0 என மாற்றுவதைப் போன்று).
  2. புதிய குறியீட்டுத் தொடுப்பை உருவாக்கவும் (/etc/init.d/net.enp3s0 போன்று).
  3. பழைய குறியீட்டுத் தொடுப்பை நீக்கவும் (rm /etc/init.d/net.eth0)
  4. புதிய குறியீட்டுத் தொடுப்பை முன்னிருப்பு ஓடுநிலையில் சேர்க்கவும்.
  5. rc-update del net.eth0 default பயன்படுத்தி பழைய குறியீட்டுத் தொடுப்பை முன்னிருப்பு ஓடுநிலையிலிருந்து நீக்கவும்.

hosts கோப்பு

அடுத்து லினக்ஸிற்கு வலையமைப்பு சூழலைப் பற்றித் தெரிவிக்கவும். இது /etc/hosts கோப்பில் வரையறுக்கப்பட்டு, பெயர் சேவையகத்தால் தீர்க்கப்படாத புரவலன்களின் புரவலன் பெயர்களை IP முகவரிகளாகத் தீர்க்க உதவுகிறது.

root #nano /etc/hosts
FILE /etc/hostsவலையமைத்தல் தகவல்களை நிரப்புதல்
# இது இப்போதைய முறைமையை வரையறுக்கிறது. இவ்வாறாக அமைக்கவும்
127.0.0.1     tux.homenetwork tux localhost
  
# வலையமைப்பில் உள்ள கூடுதல் முறைமைகளை வரையறுக்க விரும்பினால்
192.168.0.5   jenny.homenetwork jenny
192.168.0.6   benny.homenetwork benny

தொடர்வதற்கு, சேமித்து பின் உரை திருத்தியை விட்டு வெளியேறவும்.


முறைமை தகவல்

வேர் கடவுச்சொல்

வேர் கடவுச்சொல்லை அமைக்க passwd கட்டளையைப் பயன்படுத்தவும்.

root #passwd

இதற்குப் பின் வரும் பகுதிகளுள் ஒன்றில் அன்றாட பயன்பாட்டிற்காகக் கூடுதலாக ஒரு வழக்கமான பயனர் கணக்கு உருவாக்கப்படும்.

Init மற்றும் துவக்க உள்ளமைவு

OpenRC

சென்டூவை OpenRC உடன் பயன்படுத்தும்போது முறைமையின் சேவைகள், இயக்க தொடக்கம் மற்றும் இயக்க நிறுத்தம் ஆகியவற்றை உள்ளமைக்க /etc/rc.conf கோப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த /etc/rc.conf கோப்பை திறந்து அதில் உள்ளக் கருத்துக்களை உலாவவும். அமைப்புகளைத் திறனாய்வு செய்து தேவைப்படும் இடங்களில் மாற்றிக் கொள்ளவும்.

root #nano /etc/rc.conf

அடுத்து, விசைப்பலகை உள்ளமைவுகளை கையாள /etc/conf.d/keymaps கோப்பை திறக்கவும். உள்ளமைத்து சரியான விசைப்பலகையைத் தேர்வு செய்ய இதைத் திருத்தவும்.

root #nano /etc/conf.d/keymaps

keymap மாறிக்குச் சிறப்புக் கவனம் செலுத்தவும். தவறான விசை வரைபடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது வினோதமான விளைவுகளை ஏற்படும்.

இறுதியாக, மணிக்கூடு விருப்பத்தேர்வுகளை அமைப்பதற்கு /etc/conf.d/hwclock கோப்பை திருத்தவும். இதை உங்கள் தேவைக்கு ஏற்ப திருத்திக் கொள்ளவும்.

root #nano /etc/conf.d/hwclock

வன்பொருள் மணிக்கூடு UTC ஐ பயன்படுத்தவில்லை என்றால், கோப்பில் clock="local" என அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இல்லையென்றால் முறைமையானது மணிக்கூடு சரிதல் தன்மையைக் காட்டலாம்.

systemd

முதலில் systemd-firstboot ஐ இயக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது முறைமையின் பல்வேறு கூறுகள் புதிய systemd சூழலில் முதன்முறை துவங்குவதற்கு சரியாக அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும். பின்வரும் விருப்பத்தேர்வை அளிப்பதன் மூலம் நிகழ்வு இயலிடம், நேரவலயம், புரவலன்பெயர், வேர் கடவுச்சொல் மற்றும் வேர் செயற்றள மதிப்புகளை அமைப்பதற்கு பயனருக்கு ஒரு தூண்டியை அளிக்கும். மேலும் இது நிறுவலுக்கு ஒரு சமவாய்ப்புள்ள இயந்திர ID ஐ அளிக்கும்.

root #systemd-firstboot --prompt --setup-machine-id

அடுத்து, எல்லா நிறுவப்பட்ட அளகு கோப்புகளையும் முன்னமைக்கப்பட்ட கொள்கை மதிப்புகளுக்கு மீள்அமைக்க பயனர்கள் systemctl ஐ இயக்க வேண்டும்:

root #systemctl preset-all --preset-mode=enable-only

It's possible to run the full preset changes but this may reset any services which were already configured during the process:

root #systemctl preset-all

These two steps will help ensure a smooth transition from the live environment to the installation's first boot.