திரை மேலாளர்
புகுபதிகை மேலாளர் என சில இடங்களில் அழைக்கப்படும் திரை மேலாளர் ஆனது X அல்லது வேலான்ட் வரைகலை சூழலை துவக்குவதற்காக பயனருக்கு ஒரு வரைகலை புகுபதிகை திரையை அளிக்கிறது.
திரை மேலாளரை பயன்படுத்துவது கட்டாயம் இல்லை. X அல்லது வேலான்ட் ஐ முனைய தூண்டியில் உள்ள செயற்றிளத்தில் இருந்தும் துவக்கலாம் என்றாலும் திரை மேலாளர் இதில் கூடுதல் பயனுள்ள பயன்பாடுகளை அளிக்கிறது.
திரை மேலாளர் இல்லாமல் X ஐ துவக்குவதை பற்றி அறிந்து கொள்ள திரை மேலாளர் எதுவும் இல்லாமல் X ஐ துவக்குதல் கட்டுரையை காணவும்.
கிடைக்கும் மென்பொருள்
கீழே சில திரை மேலாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கீழுள்ள சில வேலான்ட் திரை மேலாளர்கள் wayland-desktop Overlay இல் கிடைக்கும் , ஆயினும் இவை இன்னும் பணித்துறை இசைவுபெற்று Portage கிளையில் இணைக்கப்படவில்லை.
பெயர் | தொகுப்பு | வகை | விளக்கம் |
---|---|---|---|
CDM | x11-misc/cdm | முனையம் | எளிமையான திரை மேலாளர். |
GNOME/gdm | gnome-base/gdm | X / வேலான்ட் | பெரும்பாலும் GNOME உடன் பயன்படுத்தப்படும். |
greetd | gui-apps/gtkgreet gui-apps/tuigreet gui-apps/qtgreet |
வேலான்ட் | greetd க்கான முன்னிலையாகும். TUIGreetd முனையத்தில் செயல்படும். |
LightDM | x11-misc/lightdm | X | எடை குறைந்த, greeter ஐ கொண்டு தனிபயனாக்கவல்ல திரை மேலாளர். |
LXDM | lxde-base/lxdm | X | LX பணித்தள சூழலின் (LXDE) திரை மேலாளர். |
Qingy | sys-apps/qingy | முனையம் | getty க்கான மாற்று. |
SDDM | x11-misc/sddm | X / வேலான்ட் | அதிகமாக தனிப்பயனாக்கவல்ல, கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்த திரை மேலாளர் K பணித்தள சூழல் குழுவால் உருவாக்கப்பட்டது. இளமையும் வலிமையும் மிக்க இந்த திரை மேலாளர் எளிமை மற்றும் அழகை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டது. |
SLiM | x11-misc/slim | X | இதற்கு வெறும் சில சார்பு தொகுதிகள் மட்டுமே தேவைப்படும். |
WDM | x11-misc/wdm | X | திருத்தியமைக்கப்பட்ட X பணித்தள சூழல் (XDM). |
XDM | x11-apps/xdm | X | X.Org இன் பணித்தள சூழல். |
உள்ளமைவு
திரை மேலாளரை அமைத்து பயன்படுத்துவதற்கு முன் தேர்ந்தெடுத்த வரைகலை சூழல், startx அல்லது வேலான்ட் எந்த சிக்கலும் இல்லாமல் வேலை செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளவும். ஏதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றால் XORG வழிகாட்டி போன்ற வழிகாட்டிகளின் உதவியை நாடவும்.
பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களில் திரை மேலாளர் தானியக்கமாக வட்டு துவக்கத்தில் தொடங்குவார். இதை தானியக்கமாக செய்ய ஒரு குறுநிரலானது INIT முறைமையின் பொருத்தமான ஓடுநிலையில் சேர்க்க வேண்டும். OpenRC மற்றும் systemd க்கான எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
OpenRC
பெரும்பாலான சமயங்களில், ஜென்டூவின் முன்னிருப்பு init முறைமையான OpenRC திரை மேலாளரை துவக்க பயன்படுத்தப்படும். பின்வரும் எடுத்துக்காட்டு SDDM ஐ திரை மேலாளராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனவே மற்ற திரை மேலாளரை பயன்படுத்தினால் அதற்கு தகுந்தவாறு இதை மாற்றிக்கொள்ளவும்.
தொகுப்பு gui-libs/display-manager-init இல்லையென்றால் அதை நிறுவவும்:
root #
emerge --ask gui-libs/display-manager-init
உள்ளமைவு கோப்பை SDDM ஐ பயன்படுத்தும் வகையில் திருத்தியமைக்க வேண்டும்:
CHECKVT=7
DISPLAYMANAGER="sddm"
தேர்வு செய்த திரை மேலாளரை துவக்கத்தில் துவக்க முறைமையின் முன்னிருப்பு ஓடுநிலையில் display-manager ஐ சேர்க்கவும்:
root #
rc-update add display-manager default
display-manager ஐ உடனடியாக துவக்க இதை இயக்கவும்:
root #
rc-service display-manager start
systemd
systemd ஐ INIT முறைமையாக பயன்படுத்தினால் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட <display-manager>.service கோப்பின் இருப்பிடத்தை கண்டறியவும்.
SDDM ஐ துவக்கத்தில் துவக்க சேவையை செயல்படுத்தவும்:
root #
systemctl enable sddm.service
SDDM ஐ உடனடியாக துவக்க இதை இயக்கவும்:
root #
systemctl start sddm.service
இதையும் காண்க
- Desktop environment — ஜென்டூவில் கிடைக்கும் பணித்தள சூழல்களின் பட்டியலை அளிக்கிறது.
- Login — logging in to a shell, and setting up the default environment.
- Window manager — manages the creation, manipulation, and destruction of on-screen windows and window decorations in Xorg.
- Xorg/Guide — explains what Xorg is, how to install it, and the various configuration options.
- X without Display Manager — describes how to start an X11 session without a display manager