முனைய போலாக்கி

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Terminal emulator and the translation is 96% complete.
Outdated translations are marked like this.
Other languages:

முனைய போலாக்கி என்பது ஒரு திரை கட்டமைப்பிற்குள் (எடுத்துக்காட்டாக X இற்குள்) ஒளி முனையத்தை இருப்பது போலச் செய்யும் ஒரு கருவியாகும். இதை முனையச் செயலி எனவும் முனையம் எனவும் tty எனவும் அழைப்பர். வழக்கமாக இது பயனர்கள் கட்டளையை உள்ளிட்டு வெளியீடுகளைக் காணும் சாளர உருவத்தை அல்லது முழு திரை அளவுள்ள மெய் நிகர் முனைய உருவத்தைக் கொண்டிருக்கும். முனைய போலாக்கி பொதுவாக அளிக்கப்பட்டுள்ள பயனருக்குப் புகுபதிகை செயற்றளமாக வரையறுக்கப்பட்டுள்ள செயற்றளத்தை துவக்கும். சென்டூவில் பாஷ் செயற்றளம் முன்னிருப்பாகும்.

துவக்கியவுடன், சென்டூ முன்னிருப்பாக மெய் நிகர் முனையத்தில் புகுபதிகை தூண்டியை அளிக்கும் அல்லது திரை மேலாளர் அமைக்கப்பட்டிருந்தால் அதைக் காட்டும். மெய் நிகர் முனையங்களைப் பற்றியும் அவற்றுக்கிடையில் எவ்வாறு மாறுவது என்பதைப் பற்றியும் அடுத்த பிரிவில் காணலாம்.

X சூழல் அமைக்கப்பட்டிருந்தால் பயனர்கள் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய முனைய போலாக்கி விருப்பத்தேர்வுகள் கிடைக்கும் - இதற்கு மென்பொருள் பிரிவைக் காணவும்.

இதையும் காண்க
உரை இடைமுகங்களைப் பற்றிய பொது மற்றும் கூடுதல் பயன்பாடு தகவல்களுக்கு செயற்றள கட்டுரையைக் காணவும்.

மெய் நிகர் முனையங்களும் அவற்றுள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுதலும்

மெய் நிகர் முனையம் (VC அல்லது VT) கருநிரலால் நேரடியாக அளிக்கப்படும் வசதிகள் மூலம் முழு திரை உரை அடிப்படையிலான ஊடாடலை அனுமதிக்கிறது. முன்னிருப்பாக சென்டூ ஆறு மெய் நிகர் முனையங்களுடன் துவங்குகிறது (இதை inittab இல் அல்லது openrc-init ஐ கொண்டு உள்ளமைகளாம்). X ஐ செயற்றளத்தில் இருந்து ஒரு மெய் நிகர் முனையத்தில் துவக்கலாம். இல்லையெனில் இதை ஒரு திரை மேலாளரில் துவக்கலாம். திரை மேலாளரைக் கொண்டு துவக்கும்போது இது வழக்கமாக மெய் நிகர் முனையம் எண் 7 இல் காண்பிக்கப்படும். ஒரு மெய் நிகர் முனையத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுவதற்கு விசைப்பலகை விசைக்கூட்டுகளைப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் chvt ஐயும் பயன்படுத்தலாம்.

உரை மெய் நிகர் முனையத்தில் விசைப்பலகையில் உள்ள Alt+F1 இல் இருந்து Alt+F6 வரையுள்ள விசைக்கூட்டுக்களை அழுத்துவதன் மூலம் மற்ற மெய் நிகர் முனையங்களை அணுக இயலும். இதைத் தவிர்த்துச் சுழல் முறையில் ஒரு முனையத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற super விசையை அழுத்தவும். இது சில விசைப்பலகையில் Win விசையாகவும் சில விசைப்பலகையில் Cmd அல்லது விசையாகவும் இருக்கும். எண்வரிசையில் முந்தைய அல்லது அடுத்த முனையத்திற்கு மாற Alt+ அல்லது Alt+ விசையை அழுத்தவும்.

X சூழலிலிருந்து லினக்சு மெய் நிகர் முனையங்களை Ctrl+Alt+F1 இல் இருந்து Ctrl+Alt+F6 வரையுள்ள விசைக்கூட்டுகளை அழுத்தி அணுகலாம்.

மெய் நிகர் முனைய எண் 7 இல் சூழல் மேலாளரால் X சூழல் துவக்கப்பட்டிருந்தால், திரும்பிச் செல்ல Ctrl+Alt+F7 விசைக்கூட்டை அழுத்தவும். இல்லையென்றால் X சூழல் துவங்கிய மெய் நிகர் முனையத்திற்குத் தகுந்த விசைக்கூட்டை அழுத்தித் திரும்பிச் செல்லவும்.

கிடைக்கும் மென்பொருள்

கீழுள்ளவை புகழ்பெற்ற முனைய போலாக்கிகளாகும்:

பெயர் தொகுப்பு விளக்கம்
Alacritty x11-terms/alacritty GPU முடுக்கிவிடப்பட்ட முனைய போலாக்கி.
Kitty x11-terms/kitty பைதான் மற்றும் சி மொழியில் எழுதப்பட்ட இந்த முனைய போலாக்கி புதுமையானது, எளிதில் கையாளக்கூடியது, பயன்கள் நிறைந்தது மற்றும் OpenGL ஐ அடிப்படையாகக் கொண்டது.
Konsole kde-apps/konsole இது K பணித்தள சூழல் பிளாசுமாவின் முன்னிருப்பு முனைய போலாக்கியாகும்.
GNOME Terminal x11-terms/gnome-terminal GNOME இன் முன்னிருப்பு முனைய போலாக்கியாகும்.
Guake x11-terms/guake GNOME இற்கான கீழ்விரி முனைய போலாக்கியாகும்.
lxterminal lxde-base/lxterminal மென்சுமை X பணித்தள சூழலுக்கான (LXDE) தரமான முனைய போலாக்கி.
rxvt-unicode x11-terms/rxvt-unicode குறைவான வள பயன்பாட்டை கொண்டு செயல்படும் இது வேகமும் தத்தல், ஒளிபுகு பண்பு, ஒருங்குறி முதலிய தனிச்சிறப்புகள் நிறைந்ததுமாகும்.
st x11-terms/st X இற்கான எளிமையான முனைய உருவாக்கம்.
Terminator x11-terms/terminator பல முனையங்களை ஒரே சாளரத்தில் அடுக்கும் ஆற்றல் கொண்ட இது GNOME இற்காக பைதான் மொழியில் உருவாக்கப்பட்ட முனைய போலாக்கியாகும்.
terminology x11-terms/terminology என்லயிட்மென்ட் பணித்தள சூழலுக்கான முன்னிருப்பு முனைய போலாக்கியாகும்.
tilda x11-terms/tilda தன்மை சுடுநர் விளையாட்டுக்களில் காணப்படும் முனையங்களை போலுள்ள கீழ்விரி முனையமாகும்.
xfce4-terminal x11-terms/xfce4-terminal Xfce பணித்தள சூழலுக்கான முன்னிருப்பு முனைய போலாக்கியாகும்.
XTerm x11-terms/xterm X.org இற்கான முன்னிருப்பு முனைய போலாக்கியாகும்.
Yakuake kde-apps/yakuake K பணித்தள சூழல் பிளாசுமாவிற்காக Konsole ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Quake பாணியில் அமைந்துள்ள கீழ்விரி முனைய போலாக்கியாகும்.

கூடுதல் முனைய போலாக்கிகளை x11-terms வகையினத்தில் கண்டறியலாம்.

பொது பயன்பாடு

செயலிகளை இடைமறித்தல்

பல செயலிகளில் Ctrl+c விசைக்கூட்டை அழுத்துவதன் மூலம் செயலிக்கு SIGINT சமிக்ஞை அனுப்பப்பட்டு செயலி உடனடியாக நிறுத்தப்படும். இதற்கான விக்கிப்பீடியா கட்டுரையை காணவும்.

பணிகள்

பல செயலிகளில் Ctrl+z விசைக்கூட்டை அழுத்துவதன் மூலம் ஒரு செயலை முடக்கி அதைப் பின்னணியில் தொடருமாறு செய்து செயற்றளத்திற்கு திரும்பும். இது பல வகையில் உதவும். எடுத்துக்காட்டாக உரை திருத்தியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது செயற்றளத்தில் ஒரு கட்டளையை இயக்கலாம். மேலும் முடக்கப்பட்டு பின்னணியில் உள்ள இந்த செயலை முன்னணிக்குக் கொண்டுவர fg கட்டளையையும் இப்போதுள்ள பின்னணி பணிகளைப் பட்டியலிட jobs கட்டளையையும் பயன்படுத்தலாம்.

பல செயற்றளங்களில் ஒரு கட்டளையின் இறுதியில் "&" குறியை இட்டுச் செயல்படுத்தினால் அந்த கட்டளை நேரடியாக பின்னணியில் துவக்கப்படும்.

Ctrl+z ஐ பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை, பணி கட்டுப்படுத்தலைப் பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை, bash ஆவணங்கள், fish ஆவணங்கள் மற்றும் zsh ஆவணங்களை காணவும்.

பழுது இடமறிதல்

தேய்ந்த திரை

சில செயல்கள் வழக்கமாக உரையைத் திரையிடும் நிலைக்கு முனையத்தைச் செயல்படவிடாமல் செய்துவிடும். எடுத்துக்காட்டாக, cat அல்லது less ஐ பயன்படுத்தி இருமத் தகவல்களை முனையத்தில் வெளியிட்டால் சில தரவுகள் கட்டுப்பாடு வரியுருக்களாக பொருள் கொள்ளப்பட்டு முனையத்தின் போக்கை மாற்றியமைக்கும். இல்லையென்றால் சில நேரங்களில் ஒரு நிரல் இறந்து போனதும் முனையத்தை இயல் மீறிய நிலையில் விட்டுவிடும்.

பெரும்பாலும் இவ்வகை சிக்கல்களை reset கட்டளையை அளிப்பதன் மூலம் சரிசெய்துவிடலாம்.

சில செயற்றளங்களில் ctrl+l (சிறிய ஆங்கில எழுத்து எல்) ஐ அழுத்தினால் செயற்றிளம் துடைக்கப்பட்டு புதிய செயற்றிளம் வரையப்படும். ctrl+c சில நேரங்களில் பயன்படலாம். இவற்றிற்கு மாற்று "stty sane" மற்றும் "tput rs1" கட்டளைகளாகும்.

சில நேரங்களில் தட்டச்சு செய்யும் வரியுருக்களை நம்மால் பார்க்க முடியாமல் போகலாம். இந்த சூழலிலும் reset கட்டளை வேலை செய்யும்.

துணுக்கு
file கட்டளையானது கோப்பின் வகையை அறியப் பயன்படும். இதன்மூலம் இருமங்களை முனையத்தில் வெளியிடுவதைத் தவிர்க்கலாம். இருமக் கோப்புகளைக் காண்பதற்கு od மற்றும் பதின்அறும திருத்தி கட்டளைகள் பயனுள்ளவையாக இருக்கும்.


cat கட்டளையைக் கோப்புகளின் உள்ளடக்கங்களைப் படிக்க மட்டும் பயன்படுத்தினால் சில சிக்கல்களைத் தவிர்க்க less போன்ற முனையத்தில் வெளியிடும் கருவிகளை பயன்படுத்தவும்.

இதையும் காண்க

வெளிப்புற வளங்கள்