Handbook:X86/Networking/Introduction/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:X86/Networking/Introduction and the translation is 50% complete.
X86 கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை

The following networking portion of the handbook describes 'advanced' network configuration for systems running the OpenRC init system utilizing netifrc as the network management system.

For systems running systemd, readers should review see the networking portion of the systemd article.

தொடங்குதல்

இந்த வலையமைத்தல் வழிகாட்டி பயனர் முறைமையைச் சரியாக உள்ளமைத்து, வன்பொருளின் வலையமைப்பு இடைமுக பெயர்(களை) தீர்மானித்துள்ளார் எனக் கருதுகிறது. வலையமைப்பு இடைமுக பெயரானது முறைமையிலுள்ள வலையமைப்பு அட்டை(களின்) பாட்டை இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைவாகப் பல இடைமுக பெயர் திரிபுகளான eno0, ens1, wlan0, enp1s0 முதலியவற்றிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. ஒவ்வொரு முறைமையும் சற்று வெவ்வேறான இடைமுக பெயர்களைக் கொண்டிருக்கும். மேல் கூறப்பட்டுள்ள எல்லா இடைமுக பெயர்களும் வேளை செய்யும் என்றாலும் பின்வரும் உள்ளடக்கம் இடைமுக பெயர் eth0 என உள்ளமைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறது.

வலையமைப்பு அட்டை உள்ளமைத்தலை தொடங்குவதற்கு, இதைப்பற்றி சென்டூ RC முறைமையிடம் சொல்லவும். இதைச் செய்வதற்கு /etc/init.d இல் net.lo இல் இருந்து net.eth0 ற்கு (அல்லது என்ன வலையமைப்பு இடைமுக பெயர் முறைமையில் உள்ளதோ அதற்கு) ஒரு குறியீட்டுத் தொடுப்பை உருவாக்கவும்.

root #cd /etc/init.d
root #ln -s net.lo net.eth0

சென்டூவின் RC முறைமை இந்த இடைமுகத்தைப் பற்றி இப்போது அறிந்துள்ளது என்றாலும் இந்த புதிய இடைமுகத்தை எவ்வாறு உள்ளமைப்பது என்பதைப் பற்றியும் அது அறிந்திருக்க வேண்டும். எல்லா வலையமைப்பு இடைமுகங்களும் /etc/conf.d/net கோப்பில் உள்ளமைக்கப்பட்டுள்ளன. கீழே இருப்பது DHCP மற்றும் நிலையான முகவரிகளுக்கான ஒரு மாதிரி உள்ளமைவாகும்.

கோப்பு /etc/conf.d/netஎடுத்துக்காட்டு வலையமைப்பு உள்ளமைவு
# DHCP க்கு
config_eth0="dhcp"
  
# CIDR குறியீட்டைப் பயன்படுத்தும் நிலையான IP க்கு
config_eth0="192.168.0.7/24"
routes_eth0="default via 192.168.0.1"
dns_servers_eth0="192.168.0.1 8.8.8.8"
  
# netmask குறியீட்டைப் பயன்படுத்தும் நிலையான IP க்கு
config_eth0="192.168.0.7 netmask 255.255.255.0"
routes_eth0="default via 192.168.0.1"
dns_servers_eth0="192.168.0.1 8.8.8.8"
குறிப்பு
இடைமுகத்திற்கு எந்த ஒரு உள்ளமைவும் குறிப்பிடப்படவில்லை என்றால் DHCP கருதப்படும்.
குறிப்பு
CIDR என்பது வகுப்பில்லாத இடைநிலை கள வழியாக்கல் (Classless InterDomain Routing) இன் சுருக்கமாகும். முதலில் IPv4 முகவரிகள் A, B அல்லது C என வகைப்படுத்தப்பட்டன. துவக்கக்கால வகைப்படுத்தல் முறை இணையத்தின் பெருத்த செல்வாக்கைக் கணித்து உருவாக்கப்படவில்லை என்பதால் புதிய தனித்துவமான முகவரிகள் தீர்ந்து போகும் ஆபத்து இருக்கிறது. CIDR என்பது ஒரு IP முகவரி பல IP முகவரிகளை பணியமர்த்த அனுமதிக்கும் ஒரு முகவரியாக்கத் திட்டமாகும். CIDR IP முகவரியானது வழக்கமான IP முகவரியைப் போலத் தோன்றினாலும் இதன் இறுதியில் ஒரு கீறலும் (slash) அதனைத் தொடர்ந்து ஒரு எண்ணைக் கொண்டு முடிகிறது; எடுத்துக்காட்டாக, 192.168.0.0/16. RFC 1519 இல் CIDR விவரிக்கப்பட்டுள்ளது.

இப்போது இடைமுகம் உள்ளமைக்கப்பட்டுவிட்டதால், இதை நாம் பின்வரும் கட்டளைகள் மூலம் தொடங்கவும் நிறுத்தவும் செய்யலாம்:

root #/etc/init.d/net.eth0 start
root #/etc/init.d/net.eth0 stop
முக்கியமானது
வலையமாக்கலைப் பழுது இடமறிதல் செய்யும்போது, /var/log/rc.log ஐ சற்று பார்வையிடவும். /etc/rc.conf கோப்பில் rc_logger மாறிக்கு NO என அமைக்கும் வரை, துவக்கச் செயல்பாடுகளின் தகவல்கள் எல்லாம் இந்த குறிப்புப்பதிவு கோப்பில் சேமித்து வைக்கப்படும்.

இப்போது வலையமைப்பு இடைமுகம் வெற்றிகரமாக நிறுத்தித் தொடங்கப்பட்டது, இதற்கு அடுத்த படியாக சென்டூ துவங்கும்போது இதைத் தொடங்க வேண்டும். இதை எவ்வாறு செய்வது என்பதை இங்குக் காண்போம்:

root #rc-update add net.eth0 default
root #rc
குறிப்பு
இறுதி rc கட்டளை இன்னும் தொடங்கப்படாத ஏதாவது ஒரு குறுநிரலை இப்போதைய ஓடுநிலையில் துவக்க சென்டூவிற்கு அறிவுறுத்துகிறது.