விம்
விம் (வி மேம்படுத்தப்பட்டது) என்பது வி என்னும் உரை திருத்தியை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்ட உரை திருத்தியாகும். இதை கட்டளை-வரி மூலமாகவோ அல்லது வரைகலைப் பணிச்சூழலுடன் கூடிய செயலி மூலமாகவோ பயன்படுத்தலாம்.
விம் உரைத்திருத்திக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் நீயோ விம் உடன் இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
வி கட்டுரையானது வி போன்ற உரை திருத்திகளைப் பற்றிய பொது தகவல்களை அளிக்கிறது. வி போன்ற உரை திருத்திகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கு விம் வழிகாட்டி ஐ காணவும். உரை திருத்திகளை சென்டூவில் நிறுவி உள்ளமைப்பதை பற்றிய பொது தகவல்களுக்கு உரை திருத்தி கட்டுரையைக் காணவும்.
நிறுவல்
USE கொடிகள்
USE flags for app-editors/vim Vim, an improved vi-style text editor
X
|
Link console vim against X11 libraries to enable title and clipboard features in xterm |
acl
|
Add support for Access Control Lists |
crypt
|
Use dev-libs/libsodium for crypto support |
cscope
|
Enable cscope interface |
debug
|
Enable extra debug codepaths, like asserts and extra output. If you want to get meaningful backtraces see https://wiki.gentoo.org/wiki/Project:Quality_Assurance/Backtraces |
gpm
|
Add support for sys-libs/gpm (Console-based mouse driver) |
lua
|
Enable Lua scripting support |
minimal
|
Install a very minimal build (disables, for example, plugins, fonts, most drivers, non-critical features) |
nls
|
Add Native Language Support (using gettext - GNU locale utilities) |
perl
|
Add optional support/bindings for the Perl language |
python
|
Add optional support/bindings for the Python language |
racket
|
Enable support for Scheme using dev-scheme/racket |
ruby
|
Add support/bindings for the Ruby language |
selinux
|
!!internal use only!! Security Enhanced Linux support, this must be set by the selinux profile or breakage will occur |
sound
|
Enable sound support |
tcl
|
Add support the Tcl language |
terminal
|
Enable terminal emulation support |
vim-pager
|
Install vimpager and vimmanpager links |
Emerge
X Window System உடைய துணை தேவையில்லை என்றால், app-editors/vim ஐ நிறுவவும்:
root #
emerge --ask app-editors/vim
கூடுதல் மென்பொருள்
G விம்
விம் ஐ ncurses அடிப்படையிலான பணிச்சூழல் மற்றும் வரைகலைப் பணிச்சூழல் (X Window System ற்காக) ஆகியவற்றோடு நிறுவ, app-editors/gvim ஐ நிறுவவும்:
root #
emerge --ask app-editors/gvim
தொகுப்புகள்
விம் இல் தொகுப்புகளுக்கான ஆதரவு உள்ளது, இதன்மூலம் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நாட்டக செயல்படு முறையை இது அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு உள்ளமைக்கப்பட்ட தொகுப்புகள் ஆவணப்படுத்தலைப் படிக்கவும்: :help packages
சொருகிகள்
app-vim என்னும் பிரிவில் கூடுதல் இலக்கணவிதிகள், மேம்பாட்டு-நிரல்கள் மற்றும் பல விம் சார்ந்த பொருட்களை அளிக்கிறது.
app-vim பிரிவில் உள்ள தொகுப்புகளை என்னென்ன என்பதை அறிய emerge அல்லது eix ஐ பயன்படுத்தவும்:
user $
emerge --search "%@^app-vim"
user $
eix -cC app-vim
Not all Vim plugins will be available in the Gentoo repository. Vim now includes native packages, as a way to install plugins, and there are also several plugin managers for Vim.
உள்ளமைவு
கோப்புகள்
விம்மை ஒவ்வொரு பயனாளருக்கும் தனித்தனியாக உள்ளமைக்கலாம் அல்லது கட்டமைப்பளாவிய உள்ளமைவு கோப்பைக் கொண்டும் உள்ளமைக்கலாம்:
- /etc/vim/vimrc - கட்டமைப்பளாவிய (உலகளாவிய) அமைப்புகளின் கோப்பு.
- ~/.vimrc - பயனர்-சார்ந்த (உள்ளூர்) அமைப்புகளின் கோப்பு. அலைக்குறி (~) பயனரின் home அடைவில் இருப்பதைக் குறிக்கிறது.
- ~/.vim/pack/foo - செருகுநிரல்கள் நிறுவப்பட்டுள்ள இடம் (விம் 8 அல்லது அதற்கும் மேல்).[1]foo இற்கு பதிலாக ஒவ்வொரு செருகுநிரலின் பெயரை இடவும்.
வண்ணத் திட்டங்கள்
விம் தொகுப்பு பன்னிரண்டிற்கும் அதிகமான வண்ணத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த பட்டியலைக் காண விம் இனுல் colorscheme என இட்ட பின் Ctrl+d என்னும் விசை சேர்க்கையை அளிக்கலாம் அல்லது Tab என்னும் விசையை இருமுறை தட்டலாம்:
:
colorscheme
blue darkblue default delek desert elflord evening industry koehler morning murphy pablo peachpuff ron shine slate torte zellner
விம் இல் colorscheme அல்லது colo என்னும் கட்டளையை அடுத்து உங்கள் விருப்பமான வண்ணத் திட்டத்தை இட்டு கடைசி வரி பயன்முறையில் மாற்றிக்கொள்ளலாம்:
:
colorscheme peachpuff
வண்ணத் திட்டங்களை நிரந்தரமாக .vimrc என்னும் கோப்பினுள் அமைக்கலாம்:
colorscheme peachpuff
syntax on
முதல் வரி முன்னிருப்பு வண்ணத் திட்டத்தை அமைக்கிறது, கடைசி வரி வண்ணத் திட்ட பயன்பாட்டை இயக்குகிறது.
வி உரை திருத்தி மற்றும் முறைமை முன்னிருப்பு உரை திருத்தியை தேர்ந்தெடுத்தல்
If Vim - and only Vim - is installed, the vi command should launch Vim. If other vi-like editors are installed, eselect may be used to choose which editor the vi command launches.
முறைமைக்கான முன்னிருப்பு உரை திருத்தியை அமைக்கும்போது விம்மை அமைக்க விரும்புவோர்களுக்கு உரை திருத்தி கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.
சென்டூ தொடரியல்
விம் இனுள் சென்டூ தொடரியல் சொருகிகளுக்கான (app-vim/gentoo-syntax) ஆதரவைச் செயல்படுத்தப் பயனரின் ~/.vimrc கோப்பில் பின்வரும் வரிகளைச் சேர்க்கவும்:
filetype plugin on
filetype indent on
leave_my_textwidth_alone
By default, Vim and Neovim do not hard-wrap lines[2], i.e., typing on a line longer than a certain length does not create a new line. However, Gentoo installs config files for Vim[3] and Neovim[4] that cause lines longer than 78 characters in .txt files to be hard-wrapped. To override this behavior, the following should be specified in the user's ~/.vimrc file:
let g:leave_my_textwidth_alone=1
bug #559800 contains some discussion around this issue.
பயன்பாடு
தொடங்குதல்
கட்டளைவரியில் இருந்து:
user $
vim --help
vim --help VIM - Vi IMproved 8.2 (2019 Dec 12, compiled Nov 26 2021 11:56:27) Usage: vim [arguments] [file ..] edit specified file(s) or: vim [arguments] - read text from stdin or: vim [arguments] -t tag edit file where tag is defined or: vim [arguments] -q [errorfile] edit file with first error Arguments: -- Only file names after this -v Vi mode (like "vi") -e Ex mode (like "ex") -E Improved Ex mode -s Silent (batch) mode (only for "ex") -d Diff mode (like "vimdiff") -y Easy mode (like "evim", modeless) -R Readonly mode (like "view") -Z Restricted mode (like "rvim") -m Modifications (writing files) not allowed -M Modifications in text not allowed -b Binary mode -l Lisp mode -C Compatible with Vi: 'compatible' -N Not fully Vi compatible: 'nocompatible' -V[N][fname] Be verbose [level N] [log messages to fname] -D Debugging mode -n No swap file, use memory only -r List swap files and exit -r (with file name) Recover crashed session -L Same as -r -A Start in Arabic mode -H Start in Hebrew mode -T <terminal> Set terminal type to <terminal> --not-a-term Skip warning for input/output not being a terminal --ttyfail Exit if input or output is not a terminal -u <vimrc> Use <vimrc> instead of any .vimrc --noplugin Don't load plugin scripts -p[N] Open N tab pages (default: one for each file) -o[N] Open N windows (default: one for each file) -O[N] Like -o but split vertically + Start at end of file +<lnum> Start at line <lnum> --cmd <command> Execute <command> before loading any vimrc file -c <command> Execute <command> after loading the first file -S <session> Source file <session> after loading the first file -s <scriptin> Read Normal mode commands from file <scriptin> -w <scriptout> Append all typed commands to file <scriptout> -W <scriptout> Write all typed commands to file <scriptout> -x Edit encrypted files --startuptime <file> Write startup timing messages to <file> -i <viminfo> Use <viminfo> instead of .viminfo --clean 'nocompatible', Vim defaults, no plugins, no viminfo -h or --help Print Help (this message) and exit --version Print version information and exit
உள்ளமைக்கப்பட்டிருந்தால் விம் ஐ துவக்குவதற்கு vi கட்டளையையும் பயன்படுத்தலாம்.
இருக்கும் கோப்பு ஒன்றைத் திறப்பதற்கு அல்லது புதிய கோப்பை உருவாக்குவதற்குப் பெயரைக் குறிப்பிடவும்:
user $
vim <filename>
பயிற்சி
விம் அதனுள் குறைந்தது 30 நிமிடங்களில் முடிக்கக்கூடிய உள்ளமைந்த பயிற்சி வகுப்பைக் கொண்டுள்ளது. vimtutor என்னும் கட்டளையைக் கொண்டு இதைத் துவக்கலாம்:
user $
vimtutor
உதவிக்குறிப்புகள்
விம்மை ex அல்லது ed போன்று கட்டளை-வரியில் பயன்படுத்துதல்
விம்மை ஒரு-வரி கட்டளையாக பயன்படுத்த முடியும். இவ்வகை கட்டளைகளை ஆணைத்தொடரில் அல்லது கட்டளை-வரியில் இட்டு கோப்பை திறக்காமலே மாற்றங்களை செய்யலாம்.
எடுத்துக்காட்டாக, பின்வரும் கட்டளை #
என்னும் குறியை file.txt என்னும் கோப்பில் உள்ள ஒவ்வொரு வரியின் துவக்கத்திலும் இடும்:
user $
vim -c ":%s/^/#/g" -c ":x" file.txt
இதில் என்ன நடக்கிறது என்றால் விம் தனக்கு -c
விருப்பத்தேர்வு மூலம் அளிக்கப்பட்ட கட்டளையின் பொருளுணர்கிறது. முதல் கட்டளை விம்மின் ஈடுசெய் கட்டளையாகும் (sed ஐ ஒத்த கட்டளை), இரண்டாம் கட்டளை விம் ஐ செயல் முடிந்தவுடன் கோப்பை சேமித்து பின் மூட உத்தரவிடுகிறது
கோப்பு குறிமுறையேற்றத்தை மாற்றுதல்
ஒரு கோப்பின் கோப்பு குறிமுறையேற்றத்தை UTF-8 ற்கு மாற்ற, பின்வரும் கட்டளையை (கடைசி வரி பயன்முறையில்) இடவும்:
:
e ++enc=utf8
மேலே கூறிய வித்தையை கட்டளை-வரியிலும் பயன்படுத்த இயலும்:
user $
vim -c ":wq! ++enc=utf8" file.txt
பழுது இடமறிதல்
நான் விம்மில் சிக்கிக்கொண்டேன், காப்பாற்றுங்கள்!
விம்மை பற்றி ஒன்றுமே தெரியாமல் ஒருவர் விம்மினுள் நுழைந்து பின் வெளியேற முடியாமல் திணறுவது ஒன்றும் புதிதல்ல.
வெளியேறுவதற்கு முதலில் esc விசையை பலமுறை அழுத்தி பின் :, q, enter விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவும். கோப்பை சேமிக்காமல் வெளியேறுவதற்கு esc விசையை அழுத்தி பின் :, q, !, enter விசையை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவும்.
பல்வேறு கோப்புகள் திறந்த நிலையிலிருந்தால் esc விசையை பலமுறை அழுத்தி பின் :, q, a, enter விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவும். கோப்புகளைச் சேமிக்காமல் வெளியேறுவதற்கு esc விசையை பலமுறை அழுத்தி பின் :, q, a, !, enter விசையை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவும்.
If this doesn't help, and desperate measures are needed, something like killall vim may be a last ditch solution (from another terminal). Beware that this will terminate all the vim sessions for a user, without saving. If run as root, such a command will terminate all vim sessions for all users on the system.
விம் தானியக்கமாக தத்தல் செய்து ஒட்டுகிறது
பின்வரும் உரையை விம்மினுள் ஒட்ட முயற்சி செய்வதாக வைத்துக்கொள்வோம்:
'"`UNIQ--pre-00000011-QINU`"'
இதைத் தானியக்க தத்தல் மூலம் விம் இவ்வாறு புரிந்துகொள்ளும். இதனால் ஒட்டப்படும் உரையின் வடிவம் குலைந்து போவதை நீங்கள் காணலாம்:
'"`UNIQ--pre-00000014-QINU`"'
இதைச் சரி செய்வதற்கு விம்மின் ஒட்டல் பயன்முறையைச் செயல்படுத்த :set paste கட்டளையையும் ஒட்டும் பணி முடிந்தவுடன் மீண்டும் பழைய பயன்முறைக்குத் திரும்ப :set nopaste கட்டளையையும் இயக்கவும்.
E1187
user $
vim foobar
E1187: Failed to source defaults.vim Press ENTER or type command to continue
8.2.4328 ஐ நிலைகுலைய வைப்பதன் மூலம் இது தீர்க்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க
- Knowledge Base:Edit a configuration file
- Neovim — a hyperextensible Vim-based text editor.
- Text editor — a program to create and edit text files.
- Useful plugin: app-vim/gentoo-syntax
- Vi — a powerful "modal" text-based editor with a long history in the Unix(like) operating system.
- Vim/Guide — explain basic usage for users new to vi-like text editors in general, and vim in particular.
வெளிப்புற வளங்கள்
- விம் ஆவணப்படுத்தல் இதில் கையேடுகள் (என அழைக்கப்படும் :help மற்றும் விலையில்லா VIM OPL நூல்), அடிக்கடி கேட்கும் கேள்விகள், HOWTO's, பயிற்சி வகுப்புகள் ஆகியவை HTML, PDF மற்றும் PS வடிவமைப்புகளில் உள்ளன.
- விம்மிற்கான பயிற்சி மற்றும் அரிச்சுவடி - ஓர் அற்புதமான விம் இற்கான தொடக்கப்பயிற்சி. இதை முதலில் படிக்கவும்.
- விம் குறுநிரல்கள்/உட்செருகுகள்
- மனிதர்களுக்கான விம் (விலையில்லா இ-புத்தகம்) - குளோன் செய்தப்பின் cd என்னும் கட்டளை மூலம் மூல அடைவிற்கு சென்று mkdir dist என்னும் கட்டளையை இடவும், பின் rst/en/Makefile என்னும் கோப்பில் உள்ள SPHINXBUILD என்னும் மாறியிற்கு
sphinx2-build
என்பதற்கு பதிலாகsphinx-build
என மாற்றவும். பின் ./makedist.sh என்னும் கட்டளையை இயக்கவும். PDF ஐ படிக்க ./dist/vimpourleshumains/ என்னுமிடத்திற்கு செல்லவும். - வி மற்றும் விம் உரை திருத்திகளை பற்றி கற்றல், 7 ஆவது பதிப்பு O'Reilly அட்டை பதிப்பு ISBN: 978-0-596-52983-3, இ-புத்தக ISBN: 978-0-596-15935-1
- விம்மின் எதிர்-சாயல்கள் - விம்மோடு ஓட்டத்தை பராமரித்தல் பற்றிய வலைப்பதிவு.
- விம் துணுக்குகளை கொண்டுள்ள விக்கீ - விக்கீயா என முன்பு அழைக்கப்பட்ட இது இப்போது Fandom.com இணையதளத்தில் உள்ளது.
- விம்: பயனுள்ள வகையில் உரையை திருத்துவதற்கான ஏழு பழக்கங்கள் - 2000 ஆம் வருடம் எழுதப்பட்டு இன்றும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு வழிகாட்டி!
குறிப்புதவிகள்
- ↑ https://vimhelp.org/repeat.txt.html#packages
- ↑ https://vimhelp.org/options.txt.html#%27textwidth%27
- ↑ https://github.com/gentoo/gentoo/blob/e1a7e5da58ec33213c680337f4240e75c5e300a4/app-editors/vim-core/files/vimrc-r6#L158
- ↑ https://github.com/gentoo/gentoo/blob/e1a7e5da58ec33213c680337f4240e75c5e300a4/app-editors/neovim/files/sysinit.vim#L58